2013/12/12

Software இல்லாமல், format செய்யாமல் New partition செய்யலாம்


முதலில் My Computer ஐ right click செய்து Manage என்பதை கிளிக் செய்து ஓபன் செய்யவும்.  இதில் Storage–> Disk Management இதில் உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk இன் Size, Drive எடுத்துக் கொண்டுள்ள Size போன்றவை இருக்கும்.
இப்போது பாருங்கள்.கீழே உள்ளது போல உங்கள் Disk Management பகுதி இருக்கும்.

இதில் கீழே உள்ள இடத்தில் பாருங்கள் Free Space என்று ஒரு பகுதி இருந்தால் அது இன்னும் partition செய்யப் படாமல் இருக்கிறது என்று அர்த்தம்.இங்கு நான் உங்களுக்காக என் ட்ரைவில் Free Space உருவாக்கி உள்ளேன். இப்போது நான் ஒவ்வொன்றாக வரிசையாக சொல்கிறேன்.

1. Free Space partition செய்வது எப்படி ?
இது மிகவும் எளிது மேலே உள்ளது போல Free space என்று காட்டப்படும் இடத்தில் Right Click செய்து New Simple Volume… என்பதை கொடுக்கவும். இப்போது அதிகம் free space இருந்தால், மேலும் புதிய ட்ரைவ்கள் உருவாக்க விரும்பினால் நீங்கள் விரும்பும் அளவு மட்டும் கொடுத்து புதிய ட்ரைவ் உருவாக்கலாம்.
அதாவது 456668 MB Free Space இருந்தால் ஒரு ட்ரைவ் க்கு இவ்வளவு வேண்டாம் என்றால் இதில் பாதி மட்டும் கொடுக்கவும், இப்படி செய்தால் மீதி Free Space ஆகவே இருக்கும் மீண்டும் ஒரு புதிய drive உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
புதிய ட்ரைவை My Computer இல் Format செய்து விட்டு ஓபன் செய்யவும்.

2. அதிகப்படியாக உள்ளதை குறைப்பது எப்படி?
இதுவும் சென்றதை போலவே. இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் C drive க்கு 100 GB கொடுத்து இருந்தால் அது வேஸ்ட் தான். எப்படி குறைப்பது?
இப்போது உங்கள் ட்ரைவில் எது அதிகமாக உள்ளதோ அதை கீழே உள்ள பகுதியிலேயே Right Click செய்து Shrink Volume…. என்பதை கொடுக்கவும்.
இப்போது மேலே உள்ள படம் வந்து கொஞ்ச நேரம் load ஆகும் பின்னர் எவ்வளவு shrink செய்ய முடியும் என்பதை காட்டும். காட்டும் அளவை விட கொஞ்சம் குறைவாக, உங்களுக்கு தேவையான அளவு  shrink செய்யவும். கவனிக்க இங்கு எல்லாம் MB இல் காண்பிக்கும் 1000 MB(or 1024 MB )= 1 GB.  இதன்படி சரியாக GB யில் shrink செய்யவும்.

முக்கியமான விஷயம் ஒரு ட்ரைவ் இல் shrink செய்ததை வைத்து புதிய Drive மட்டுமே உருவாக்க முடியும், அல்லது அதே Drive இல் மீண்டும் Extend செய்யலாம். வேறு ஒரு Existing ட்ரைவ்க்கு பயன்படுத்த முடியாது.

3. Extend செய்வது எப்படி?
இது shrink செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதிகமாக shrink  செய்து விட்டால் இதன் மூலம் மீண்டும் drive சைஸ் தனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக