2012/08/07

நகைச்சுவை...

அப்பா : ஏண்டா உனக்கு என்னாச்சு? திடீர்னு வந்து பேர மாத்தச்சொல்ற?
மகன் : ராம் ன்னு என் பேரைச்சொன்னாலே ரீட் ஒன்லி மெமரியா? (ROM) ரெண்டாம் அக்சஸ் மெமரியா (RAM) ன்னு பிரண்ட்ஸ் எல்லாம் கேலி பண்றாங்கப்பா...
*****

கம்பியூட்டர் பக்கத்தில மர வேலை செய்றவர உட்கார வச்சிருக்கியே எதுக்குப்பா?
நீங்கதானே சார் டேபிள் ஒன்று உருவாக்கணும்ன்னு சொன்னீங்க...
*****

டீ கடைல
ஏங்க ஒரு ஹார்ட்டிஸ்க்கில உள்ளத மற்றொரு ஹார்ட் டிஸ்க்குக்கு எப்பிடி காப்பி செய்றது..?
டீ மாஸ்டர் குறுக்கிட்டு..
ஏம்பா.. காபி போடுறது எப்பிடின்னு என்கிட்டே கேட்ட நான் சொல்லமாட்டன..!
*****

காலம்

கொட்டும் பனி கருதாது
சுடும் வெயில் கருதாது
வாட்டிடும் களைப்பும் கருதாது
உணர்ச்சியற்ற  உடலாய் - இரத்த
உறவைப் போற்றி
ஊர் பல சுற்றி
ஓர் இரு நாட்களென்ன
பல மாதங்கள்
லொட்ச், பஸ் ஸ்டாண்ட்
ஹொஸ்பிடல்  தொட்ட
உன் கரங்களும் கால்களும்

இன்று
இரத்தமின்றி வைத்தியசாலையை
முத்தமிட்ட போதும்
உறவுகள் சத்தமின்றிப் போனதே...

காலத்தின் கோலம்
புரியவில்லை எனக்கு...
உறவுகளின் நிசப்தம்
தெரியவில்லை எனக்கு...
          -என் தந்தை வைத்தியசாலையில்
                  இருந்தபோது எழுதியது-

தொலைபேசி


உறவுகளுடன் உறவாடிடும்
உணர்ச்சிமிக்க உயிரட்ட - ஒரு
உடல்...
***

கணனியின் வகைகள்

பருமன் அடிப்படையில் கணனியின் வகைகள்
1. Personal Computer /Micro Computer
     a). Desktop
     b). Laptop
     c). Notebook
     d). Palmtop
     e). Workstation
2. Server
3. Main Frame
4. Super Computer
5. Mini Computer

தொழில் நுட்பத்தின்  அடிப்படையில் கணனியின் வகைகள்
1 . இலக்கக் கணனி (Digital Computer)
2 . ஒப்புமைக் கணனி (Analog Computer)
3 . இணைக்  கணனி  (Hybrid Computer)


பொத்துவிலின் இயற்கை வளங்கள்

பொத்துவில் பிரதேசமானது மிக அழகிய இயற்கை வளங்களை கொண்டுள்ளது. அவற்றுள் பொத்துவில் மண்மலை, தொல்  பொருள் நிலையம், கொட்டுக்கள் மலைச் சூழல், கோமாரி கடற்கரை, அருகம் குடா, அருகம் குடா  பாலம்,  பொத்துவில் களப்பு,  பொஇன்ட் மலைச்சூழல், முதலை மலை, குடாக்கள்ளி மலை,  நாவலாறு போன்றன சுட்டிக்காட்டத்தக்க பிரசித்தி பெற்ற இடங்களாகும்.
 

அருகம் குடா  பாலம்
கொட்டுக்கள் மலைச் சூழல்
கொட்டுக்கள் மலைச் சூழல்
தொல்  பொருள் நிலையம்
தொல்  பொருள் நிலையம்
கோமாரி கடற்கரை
  பொத்துவில் களப்பு
 பொத்துவில் மண்மலை
பொத்துவில் பொஇன்ட் மலைச்சூழல்
    

2012/07/30

வண்டுகளின் வாரிசுகள்

புஸ்பங்களுக்கும் நிம்மதியில்லை
புரிந்துணர்வின்றி கற்பழித்துவிட்டன
தேன் தேடி வந்த வண்டுகள்...

சூலகங்களின் விரிசல்களினால்
காயாகிப் போனதிங்கே
கற்பழிக்கப்பட்ட புஷ்பங்கள்...

யாரறிவார்
வண்டுகளின் வாரிசுகளை 
புஷ்பங்கள் சுமப்பதை...
***
   
கணணி ஒன்றின் பிரதான செயற்பாட்டை வரையறுக்குக ..?
தரவுகளை உள்வாங்கி அதனை ஒழுங்குபடுத்தி
தகவல்களை வெளியிடுதலே கணனியின் பிரதான செயற்பாடாகும்.

தரவு என்றால் என்ன....?
கணனியில் சேமிக்கக் கூடிய அல்லது ஒழுங்கு படுத்தக் கூடிய
நிலையிலுள்ள எழுத்துக்கள், இடம், மக்கள், இலக்கங்கள், உருவங்கள்,
சத்தங்கள், எண்ணக்கருக்கள், பொருள்கள் என்பன தரவாகும்.

தகவல் என்றால் என்ன...?
தரவுகளை நிபந்தனைகளுக்கேட்ப ஒழுங்குபடுத்துவதனால்
கிடைக்கப் பெறுவது தகவலாகும்.
 

சிரிப்பதற்கு

நாட்டாம : என்றா பசுபதி...
பசுபதி : 1,2,3,4,5,6,7,8....
நாட்டாம : என்றா ...
பசுபதி : அதான் என்றோம்ல...
-------------
 
SMS இற்கு அர்த்தம் தெரியுமா...?
S - சிங்கம் அனுப்ப
M - மங்கி படிக்கும்
S - சிமோல் ஸ்டோரி
-------------

கண்ணா ஒன்னு சொல்றன் நல்லா கேட்டுக்க...
உடம்புல சுகரும் மனசுல பிகரும் இருக்கிறவன்
என்னைக்கும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல..
--------------

அமைவிடம்

பொத்துவில் பிரதேசமானது இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். வடக்கில் திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவையும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும் தெற்கு மற்றும் மேற்காக லகுகல பிரதேச செயலகப் பிரிவையும்  எல்லைகளாகக் கொண்டுள்ளது. பொத்துவில் பிரதேசமானது அம்பாறை நகரிலிருந்து 71 கிலோ மீற்றர் தூரத்திலும் கல்முனை நகரிலிருந்து 67 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் நீளம் 21 கிலோ மீற்றர்,  அகலம் 06 -15 கிலோ மீற்றர் வரையாகவும் அமைந்துள்ளதுடன் பரப்பளவு 269 சதுர கிலோ மீற்றர் ஆகவும் உள்ளது.

2012/07/29

கணணி என்றால் என்ன...?

தரவுகளை உள்வாங்கி எமது நிபந்தனைக்கேட்ப ஒழுங்கமைத்து தகவல்களை வெளியிடுவதோடு தரவுகளையும்  தகவல்களையும் சேமிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் சாதனம் கணணியாகும்.

அப்பில் அழுகிறது

 
..அப்பில் அழுகிறது...

வாழைப்பழம் : ஏன் அழுற...?
அப்பில் : எல்லாரும் என்ன வெட்டி வெட்டி சாப்புர்றாங்க...
வாழைப்பழம் : செட்.... நீ என்ன விட பரவால்ல...
அப்பில் : ஏன்..?
வாழைப்பழம் : ஒன்ன சரி வெட்டி வெட்டி சாப்புர்றாங்க...
என்ன ரெஸ்ச கலட்டி வீசிட்டு கடிச்சி கடிச்சி
சாப்புர்றாங்க எனக்கு எவ்வளவு வெக்கமா
இருக்கு தெரியுமா...?

உள்ளே செல்ல முன் ...

கவிதையால்
கண்ணுக்கு குளிர்ச்சியளிக்க
கண்ணதாசன் நானல்ல
வைர வரிகள் எழுத
வைரமுத்தும் நானல்ல...!

பார்த்தவுடன் பாடுவதற்கு
பாரதி நானல்ல
பறவைக்கும் பாவிசைக்க
பாரதிதாசன் நானல்ல...!

புதுமைக்கு
புகழ் சேர்க்க வந்த
புதுப் பாவலன் நான்
இதயத்திலுள்ள என் வடுக்களை
இலக்கியத்தில் துவைக்க வந்த
இன்னிசைப் பாடகன் நான்...!

இளங்கவிக்கு இலக்கணமில்லை
இவை இலக்கணமில்லா
புதுக் கவிதைகள்...!

புதுமையுடன் பொறிக்கிறேன்
பொறுமையுடன் படிப்பீர்கள் என்னும்  
பொன் எண்ணத்தில்...!

விலையின்றி சூல் கொண்டு
விளைந்திட்ட கவிகளுக்கு
உங்கள் விமர்சனங்களையும்
சமர்ப்பியுங்கள்...!

 - அன்புடன் -
   எம்.சுபனா

(எம்.சுஐபு ரினாஸ் )