2013/12/12

நமது personal Folder களை மறைக்க நாம் ஏதேனும் சாப்ட்வேர் பயன்படுத்துவோம். அந்த சாப்ட்வேர் கிராஷ் ஆகிவிட்டால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் Folder அம்போதான். அப்படி இல்லாமல் எளிதாய் இதை செய்ய ஒரு வழி

முதலில் Start—>Run—>cmd

இப்போது command Prompt ஓபன் ஆகும். இதில் C:\Documents and Settings\content இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )


இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது 


D:/>attrib +h +s Folder Name 

Folder Name–> Your Folder Name. 
இப்போது உங்கள் Folder  மறைந்து இருக்கும். அதை மீண்டும் தெரிய வைக்க 

D:/>attrib -h -s Folder Name 
நீங்கள் Hidden folder கள் இருந்தாலும் யாரும் பார்க்க முடியாது. நீங்கள் மட்டுமே இதை திரும்ப கொண்டுவர முடியும். 
 

Password எதுவும் நினைவில் கொள்ள தேவை இல்லை நீங்கள். attrib ±h, ±s. இதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். 
 
இதில் முக்கியமான விஷயம் C Drive இல் உள்ள folder களை மட்டும் இதில் மறைக்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக