2013/12/12

கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig

நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த msconfig உதவுகிறது.



எதற்கு இந்த msconfig?
உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.

இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

இது XP, Vista, Windows 7 வேறு விதமாக உள்ளதால் மூன்றையும் தருகிறேன்.

XP பயனர்களுக்கு

இதில் Run–> msconfig
இப்போது கீழே உள்ள விண்டோ வரும். அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்
இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.

இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.

Vista பயனர்களுக்கு
இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் run இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது start menu வில் search செய்யும் இடத்தில் முழுவதுமாக msconfig என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும். அதற்கு பின் செய்முறையில் Windows 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே comment இல் சொல்லவும்.

Windows 7 பயனர்களுக்கு
இதிலும் Run–> msconfig

இதில் வரும் புதிய விண்டோவில் Start up என்பது கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே XP க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும். பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.

எந்த அளவுக்கு நீங்கள் Uncheck செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் RAM வேகத்தை அதிகமாக்கும். முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக