லேபிள்கள்

புதிர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2014/07/22

ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்

ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37

அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74

வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=***

கடைசி விடையை கூறவும்.

எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின் 5 ஆல் வகுத்தால் கிடைக்கும்,

ஆனால் வகுக்காமல் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற

கடைசி விடையிலிருந்து கடைசி எண்ணை நீக்கவும் : 370->37

இலகுவான எண் புதிர்...

1. ஓர் எண்ணை நினைக்கவும் : உ+ம் 157

2. அத்துடன் அடுத்த கூடிய எண்ணைக் கூட்டவும் : 157+158=315

3. வரும் விடையுடன் 9 ஐ கூட்டவும் : 315+9=324

4. பின் இரண்டால் வகுக்கவும் :324/2=162

5. அத்துடன் எண்ணிய எண்ணைக் கழிக்கவும் : 162-157=?
 
6. உங்கள் விடை எப்போதுமே 5 ஆகும்.

ஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் புதிர்

    Math-Trick-
  1. இரு எண்களுடைய எண்ணை நினைக்கவும்  உ+ம்- 80
  2. அதனை இரண்டால் பெருக்கவும் :80*2=160
  3. ஐந்தைக் கூட்டவும் : 160+5=165
  4. பின் 50 ஆல் பெருக்கவும் : 165*50=8250
  5. வரும் விடையுடன்
  • இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் கழிந்திருப்பின் 1763 ஐக் கூட்டவும்
  • இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் இன்னும் கழியாதிருப்பின் 1762 ஐக் கூட்டவும். 
  • கூட்டி வரும் விடையுடன் உங்கள் பிறந்த ஆண்டை கழித்து விடையை கூறவும்
நீங்கள் நினைத்த எண்ணையும் உங்கள் வயதையும் கண்டுபிடிக்க
  • கடைசியாக வந்த விடையின் முதல் இரு எண்ணும் நீங்கள்  நினைத்த எண் ஆகும்,
  • மற்ற இரு எண்ணும் உங்கள் வயதாகும்.
       உ+ம்
      இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் கழிந்திருப்பின் 1763 ஐக் கூட்டவும்:         
       8250+1763=10013 நீங்கள் பிறந்த ஆண்டு 1980 எனின்
       10013-1980= 8033

2014/07/21

ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிர்

  1. பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 7
  2. அவ் எண்ணை இரண்டால் பெருக்கவும் -   இங்கு 7*2=14
  3. அத்துடன் 5 ஐக் கூட்டவும்  – 14+5=19
  4. பின் வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் -   19*5=95. இவ் விடையை எழுதி வைக்கவும்.
  5. இரண்டாவது எண்ணாக பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) இன்னொரு ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 4
  6. இரண்டாவது  நினைத்த எண்ணை (படி 4 இல் ) எழுதி வைத்த எண்ணுடன் கூட்டவும். எனவே 95+4=99
  7. விடையை கூறவும்
நினைத்த இரு எண்களையும் கண்டுபிடிப்பதற்கு
  • கடைசி விடையிலிருந்து 25 ஐக் கழிக்கவும் 99-25=74
  • இங்கு முதல் எண்  நீங்கள் நினைத்த முதல் எண்ணும் இரண்டாவது மற்றைய எண்ணுமாகும்.

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில் திடீரென ஒரு கடினமான புதிரை தொடுத்தான். அவன் அவரைப் பார்த்து

” ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் எந்த எண்ணாலும் பிரிக்கும் போது மீதி வராத எண் எது?”

தற்காலத்தில் இலகுவாக 1*2*3*4*5*6*7*8*9=362880 எனலாம், ஆனால் அறிவு மேதை அலி (ரழி) அவர்களோ சட்டென இலகுவாக வேறொரு விடை அழித்தார்கள்

விடை 

அவர் அவனைப் பார்த்து ஒரு வருடத்தில் உள்ள நாட்களை கிழமையில் உள்ள நாட்களால் பெருக்க உமக்கு விடை கிடைக்கும் என்றார்.  இவ் விடையைக் கேட்ட  முஷ்ரிக் திகைத்து விடையை கணக்கிட்டு சரி பார்த்தான். அதாவது இஸ்லாமிய சந்திர வருட கணக்குப் படி வருடத்திற்கு 360 நாட்கள், கிழமையில் ஏழு நாட்கள். எனவே
360*7=2520 விடை ஆகும்.
2520 ÷ 1 = 2520
2520 ÷ 2 = 1260
2520 ÷ 3 = 840
2520 ÷ 4 = 630
2520 ÷ 5 = 504
2520 ÷ 6 = 420
2520 ÷ 7 = 360
2520 ÷ 8 = 315
2520 ÷ 9 = 280
2520 ÷ 10= 252 !!!!!

2014/07/16

கணித வினோதம்...


Just try....
உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்

2) அதை இரண்டால் பெருக்கவும்.

3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்.

4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்.

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்.

6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)

இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது.

2013/09/18

நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) உடையவரா?

Body mass index
(BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவு மிகவும் முக்கியமாகும். உடலின் (BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவைக் கணிப்பது எவ்வாறென்றால் :-
 வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX)=நிறை (கிலோகிராம்)/(உயரம் x உயரம் (மீட்டரில்))
உதாரணமாக உங்கள் நிறை 70 கிலோகிராமும் உயரம் 1.7 மீட்டரும் எனில்
உங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX)=70/(1.7*1.7)
=24.22 ஆகும்.
சுகதேகியாக உள்ள ஒருவரின் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) 25 ஆகும் (மத்திமம்)
நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு உடையவரா? என்பதை உங்களது வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) மூலம் கீழுள்ள தொகுப்பினால் அறியலாம்
18க்கு குறைவு – இந்நிலைமை உள்ளவர்களுக்கு பொதுவாக எந்த நோயும் ஏற்படலாம்.
18– 25 க்கு இடையில் – மத்திமம் – வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்
26 – 32 க்கு இடையில் – பருமன் உள்ளவர்
32 க்கு மேல் – அதிகமான பருமனும் – கொழுப்பும் உள்ளவர்.

உங்கள் நண்பன் எண்ணிய எண்ணை கூற

பின்வருமாரு கூறவும்
tamil riddles
  1. ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 5238
  2. அவ் வெண்ணுடன் கடைசியாக பூச்சியத்தை சேர்க்கவும்- 52380
  3. பின் முதல் நினைத்த எண்ணைக் கழிக்கவும் – 52380 – 5238 = 47142
  4. அத்துடன் 54 இனை கூட்டவும்- 47142 +54 = 47196
  5. வரும் விடையிலிருந்து பூச்சியத்தை தவிர ஏதாவது ஓர் எண்ணை நீக்கவும்
  6. எஞ்சிய எண்களை கூறச் சொல்லவும் – உ+ம் ஆக 7 ஐ நீக்கியிருப்பின் உங்கள் நண்பன் விடையாக 4,1,9,6, என்பார்
நீக்கிய எண் 7 என்பதை கண்டுபிடிக்க
  1. விடையாக கூறிய எண்களை கூட்டவும்- 4+1+9+6=20
  2. வந்த விடையை விட கூடிய 9 இன் மடங்கை எடுக்கவும்- இவ் உதாரணத்தில் 27
  3. கூடிய ஒன்பதின் மடங்கிலிருந்து கூட்டிய விடையை கழிக்க நீக்கிய எண் வரும்- 27-20=7

புதிய கூட்டல் புதிர்

உங்கள் நன்பரிடம் சவால் விட முன் 1089 எனும் எண்ணை நன்பனுக்கு தெரியாமல்  ஒரு காகிதத்தில் எழுதி மடித்து வைக்கவும்.
பின் நண்பனிடம் கீழ் கண்டவாறு செய்யச் சொல்லவும்
  1. மூன்று இலக்கங்களுடைய ஓர் எண்ணை ஒரு காகிதத்தில் உங்களுக்கு தெரியாமல் எழுத சொல்லவும். அம்மூன்று இலக்கங்களும் வித்தியாசமான எண்களுடனும் முதல் எண் கடைசி எண்ணை விட பெரிதாகவும் இருக்க வேண்டும்.
  2. பின் அவ்வெண்ணை முன்பின்னாக எழுதி முதல் எண்ணிலிருந்து கழிக்கச் சொல்லவும்.
  3. மீண்டும் வந்த விடையை முன்பின்னாக எழுதி முதல் வந்த விடையுடன் கூட்டவும்.
  4. நண்பனின் விடையை முன் கூட்டியே கண்டு பிடித்தாக கூறி மடித்து வைத்த காகிதத்தை திறந்து பார்க்கும்படி கூறவும்.
  5. new sum trick
  6. மேற்கண்ட முறைபடி எந்த எண்ணுக்கு செய்தாலும் விடை 1089 ஆகும்.

ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற

ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37
அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74
வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=***
கடைசி விடையை கூறவும்.
எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின் 5 ஆல் வகுத்தால் கிடைக்கும்,
ஆனால் வகுக்காமல் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற
கடைசி விடையிலிருந்து கடைசி எண்ணை நீக்கவும் : 370->37

இலகுவான எண் புதிர்

A. ஓர் எண்ணை நினைக்கவும் : உ+ம் 157

B. அத்துடன் அடுத்த கூடிய எண்ணைக் கூட்டவும் : 157+158=315 
C. வரும் விடையுடன் 9 ஐ கூட்டவும் : 315+9=324
D. பின் இரண்டால் வகுக்கவும் :324/2=162
E. அத்துடன் எண்ணிய எண்ணைக் கழிக்கவும் : 162-157=?
F. உங்கள் விடை எப்போதுமே 5 ஆகும்.

அதிசய எண்: 6174

இந்த எண்ணில் என்ன அதிசயம் இருக்கு?. முதலில் ஒரு நான்கு இலக்க எண்ணை தேர்வு செய்யுங்கள். ஒரே ஒரு நிபந்தனை அது (1111,2222,3333…) போன்ற எண்களாக இருக்க கூடாது. இந்த வருடத்தினையே எடுத்துக்கொள்வோமா? 2007

இந்த எண்ணை(2,0,0,7) வைத்துக்கொண்டு அதிகபட்சமாக(இறங்கு நிலை) எந்த எண்ணை எழுத முடியுமோ அதனை எழுதுங்கள் – 7200
அதே போல குறைந்த எண்ணையும் எழுதுங்கள். அதிக எண்ணில் இருந்து குறைந்த(ஏற் நிலை) எண்ணை கழிக்கவும் – 0027

7200 – 0027 = 7173

இதே போல (7,1,7,3) இலக்கங்களுக்கு தொடரவும்

7731 – 1377 = 6354

6543 – 3456 = 3087

8730 – 0378 = 8352

8532 – 2358 = 6174

7641 – 1467 = 6174

அட இதற்கு மேல் 6174 என்று மட்டுமே வருகின்றதே.அது தான் இந்த எண்ணில் சிறப்பு. மொத்தம் உள்ள 8991 (9000-9) எண்களை எவற்றை தேர்தெடுத்தாலும் 7 சுற்றுக்குள் 6174 எண்ணை அடைந்து விடுமாம். முயன்று பாருங்களேன். ஏழு சுற்றுக்கு மேல் நீங்கள் சென்றால் கணக்கு ஒழுங்க போடதெரியலைன்னு அர்த்தமாக்கும்.. மற்றொரு எண்ணிற்கு இதனை போடலாமா?
 நான் பிறந்த ஆண்டு-1985
9851 - 1589 = 8262,
8622 - 2268 = 6354
6543 – 3456 = 3087
8730 – 0378 = 8352
8532 – 2358 = 6174
7641 – 1467 = 6174 வந்துடுச்சா?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!

நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!
செய்ய வேண்டியது:
1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.
2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.
3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.
4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.
என்ன குழம்புகிறதா?
உதாரணமாக 9×4=36 

படத்தில் உள்ளது போல
உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]
3…6..=36 தான் விடை
இன்னொரு கணக்கு 9×7=63 இந்த விடை எப்படி வந்தது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?

அறிவுக்கே அறிவு...

மூன்று பேர் ஒரு ஹோட்டலில் ஒரு ரூம் எடுக்கின்றனர். ஒருவருக்கு வாடகை ரூ.100, மொத்தமாக 300 ரூபாய் தருகின்றனர். சிறிது நேரம் கழித்து கவனித்த மேலாளர் அவர்கள் தங்கி உள்ள அறைக்கு வாடகை ரூ.250 மட்டுமே என்பதை. இப்போது ரூம் பாயை அழைத்து ரூ.50 ஐ திருப்பி கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொல்கிறார். அந்த ரூம் பாய் அதில் ஆளுக்கு 10 ரூபாய் மட்டுமே திருப்பி தருகிறான். மீதி 20 ரூபாயை அவனே வைத்துக் கொள்கிறான்.

இங்கு கேள்வி என்னவெனில். கணக்கு பாருங்கள் ஒருவருக்கு செலவு ரூ.90, மூவருக்கும் சேர்த்து ரூ.270. ரூம்பாய் வைத்து இருப்பது ரூ.20 எனில் ரூ.300 மீதி 10 ரூபாய் எங்கே?
--------------------------------------------------

இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் மீன் பிடிக்க செல்கின்றனர். ஆளுக்கொரு மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் மூன்று மீன்கள் மட்டுமே உள்ளது. அது எப்படி?
--------------------------------------------------

தோகை விரித்து ஆடும் மயில் 4 அடி உயரத்தில் இருந்து முட்டை இடுகிறது. முட்டை உடையுமா? உடையாதா?
---------------------------------------------------






2013/09/17

அறிவுக்கே அறிவு

1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ? ஓரழகனா...
 
ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.  - கண்ணன் தான் மற்றவர்.

2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் ? 
கடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. 
நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே !


3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன ?
 
 (5000 என்றால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடை 4100)

சிக்கல்ஸ்

259 x உங்களோட வயது x 39

பெருக்கிப் பாருங்க . விடையை பார்த்து அசந்து போவிங்க . 3 தடவை ரிபீட் ஆகும் . எதுன்னு கேட்டா ? பெருக்கித் தான் பாருங்களேன்.
-----------------------------------------------------------------------

ஒரே காம்பவுண்டில் உள்ள மூன்று வீட்டிற்கு ஆப்பிள் வியாபாரி, தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதியையும் + அரை ஆப்பிளையும் முதல் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

 
மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

இப்போது வியாபாரியின் கூடை காலியாகிவிட்டது! அப்படியானால் வியாபாரி கொண்டுவந்த ஆப்பிள்களின் எத்தனை முழு ஆப்பிள்களும், எத்தனை அரை ஆப்பிள்களும் இருந்தன?

விளக்கம்:-


பாதி என்றால்:- பத்தில் பாதி ஐந்து...., நான்கில் பாதி இரண்டு...... என்று பொருள்
அரை என்பது:- ஒரு ஆப்பிளை வேட்டினால் வரும் பாதி துண்டு = அரை!
------------------------------------------

உங்கள் சட்டையை விட உங்கள் பேன்ட்டின் விலை100 ரூபாய் அதிகம், இரண்டும் சேர்த்து 110 ரூபாய் எனில், தனித் தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்க!!
------------------------------------------

தீப்பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உள்ளன. அதை 3 சமமற்ற குவியலாக கொட்டப்பட்டன.
2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.

இப்படி சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களிலும் குச்சிகள் சமமான எண்ணிக்கையை காட்டின.

அப்படியானால் ஆரம்பத்தில் ஒவ்வொரு (சமமற்ற) குவியல்களில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
--------------------------------------------

கீழ்மாடி ஒரு அறையில் 3 சுவிச் உள்ளது. அதில் ஒன்று மேல்மாடிக்குரியது.நீங்கள் சுவிச்சைப் போட்டு ஒரு முறை மட்டும் தான் மேலே போய் பார்த்து வரமுடியும்.அதில் எந்த சுவிச் மேல்மாடிக்குரியது என எப்படி அறிவீர்கள்?
---------------------------------------------

ஒரு குளம் இருக்கு அதுல ஒரு தவளை இருக்கு குளத்திற்கு மொத்தம் 9 படிகள் இருக்கு அந்த படியின் வழியாதான் தவளை வெளியில் வரனும் அதில் ஒரு கண்டிஷன் இருக்கு ஒரு நாளைக்கு 2 படி ஏறினால் ஒரு படி இறங்கி விடவேண்டும். அப்போ எத்தன நாட்கள்ள அது வெளியில் வந்திருக்கும்.