2014/06/26

WiFi தொழில்நுட்பம்

Wi-Fi இன் விரிவு”wireless fidelity” மேலும் இது high-frequency wireless local area network (WLAN) தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone , VoIP phone access போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம். 
இத்தொழில்நுட்பத்தை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் 1992ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்த Wireless Network – WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network – ஐ விளக்குகிறது,
.
WLAN தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் IEEE 802.11 standards அடிப்படையாகக் கொண்டது. Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.

இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz – 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;

802.11a – இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.

802.11b – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

802.11g – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
802.11n – இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g – ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output (MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network – க்கு ஒரு பெயர் உண்டு, அதை – SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router – இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel – ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும். மற்றும், நம்முடைய Wireless Router – களை Secure Mode – லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.

WiFi Protected Access – WPA, Wired Equivalency Privacy – WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.

புளுடூத் தொழில்நுட்பம்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.இந்த தொழில்நுட்பமாது இன்று Personal Area Network எனப்படும் வீடுகளில் கணினிகள்,பிறுன்ராகள்,மற்றும்  செல்பேசிகள் என்பவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலையமைப்பில் பயன்படுகிறது. அன்றாடத் தேவைகளில் பலவகையான இணைப்புக்களை நாம் பயன்படுத்திவருகின்றோம்.இவ்விணைப்புக்களை பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

 ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்..

இந்த Personal Area Network இல்( PAN 0r piconet) இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க்(புளுடூத்) அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:
அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:
எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

முதலுதவி முறைகள்-II

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :மயக்கம் வந்தால்  :
வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.


யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்  உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி
மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும். மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.

அந்நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?
குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.
இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.

பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.

தண்ணீரில் முழ்கினால்...
ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும். அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பிபக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும்.  அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

முதலுதவி முறைகள்-I


தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்.

  1. எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
  2. விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
  3. ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
  4. சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
  5. தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
  6. கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
  7. தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
  8. இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
  9. தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
  10. தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.