2013/09/17

அறிவுக்கே அறிவு

1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ? ஓரழகனா...
 
ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.  - கண்ணன் தான் மற்றவர்.

2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் ? 
கடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. 
நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே !


3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன ?
 
 (5000 என்றால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடை 4100)

சிக்கல்ஸ்

259 x உங்களோட வயது x 39

பெருக்கிப் பாருங்க . விடையை பார்த்து அசந்து போவிங்க . 3 தடவை ரிபீட் ஆகும் . எதுன்னு கேட்டா ? பெருக்கித் தான் பாருங்களேன்.
-----------------------------------------------------------------------

ஒரே காம்பவுண்டில் உள்ள மூன்று வீட்டிற்கு ஆப்பிள் வியாபாரி, தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதியையும் + அரை ஆப்பிளையும் முதல் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

 
மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

இப்போது வியாபாரியின் கூடை காலியாகிவிட்டது! அப்படியானால் வியாபாரி கொண்டுவந்த ஆப்பிள்களின் எத்தனை முழு ஆப்பிள்களும், எத்தனை அரை ஆப்பிள்களும் இருந்தன?

விளக்கம்:-


பாதி என்றால்:- பத்தில் பாதி ஐந்து...., நான்கில் பாதி இரண்டு...... என்று பொருள்
அரை என்பது:- ஒரு ஆப்பிளை வேட்டினால் வரும் பாதி துண்டு = அரை!
------------------------------------------

உங்கள் சட்டையை விட உங்கள் பேன்ட்டின் விலை100 ரூபாய் அதிகம், இரண்டும் சேர்த்து 110 ரூபாய் எனில், தனித் தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்க!!
------------------------------------------

தீப்பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உள்ளன. அதை 3 சமமற்ற குவியலாக கொட்டப்பட்டன.
2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.

இப்படி சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களிலும் குச்சிகள் சமமான எண்ணிக்கையை காட்டின.

அப்படியானால் ஆரம்பத்தில் ஒவ்வொரு (சமமற்ற) குவியல்களில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
--------------------------------------------

கீழ்மாடி ஒரு அறையில் 3 சுவிச் உள்ளது. அதில் ஒன்று மேல்மாடிக்குரியது.நீங்கள் சுவிச்சைப் போட்டு ஒரு முறை மட்டும் தான் மேலே போய் பார்த்து வரமுடியும்.அதில் எந்த சுவிச் மேல்மாடிக்குரியது என எப்படி அறிவீர்கள்?
---------------------------------------------

ஒரு குளம் இருக்கு அதுல ஒரு தவளை இருக்கு குளத்திற்கு மொத்தம் 9 படிகள் இருக்கு அந்த படியின் வழியாதான் தவளை வெளியில் வரனும் அதில் ஒரு கண்டிஷன் இருக்கு ஒரு நாளைக்கு 2 படி ஏறினால் ஒரு படி இறங்கி விடவேண்டும். அப்போ எத்தன நாட்கள்ள அது வெளியில் வந்திருக்கும்.