2022/12/12

ERP System என்றால் என்ன..?

Enterprise Resource Planning (நிறுவன வள திட்டமிடல்) என்பது ஒரு வகையான கணினி மென்பொருள் (Computer Software) அமைப்பாகும். ஒரு நிறுவனத்தின் சிறந்த செயல்திறனுக்காக முக்கிய வணிக செயல்முறைகளை தானியங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் இவ்வகையான மென்பொருள்கள் உதவுகின்றன. 


வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கணக்கியல் (Accounting), உற்பத்தி (Manufacturing), இருப்பு (Stock), கொள்வனவு (Purchasing), விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain Management), விற்பனை (Sales), சந்தைப்படுத்தல் (Marketing), மற்றும் மனித வளங்கள் (Human Resources) உள்ளிட்ட துறைகளில் இவ்வகையான ERP மென்பொருள்கள் பிரதானமாக பயன்பாட்டில் உள்ளன.
  
முன்னிலையில் உள்ள  ERP மென்பொருள்கள்:

  1. Oracle Net Suite
  2. Sage Intacct
  3. SAP Business One
  4. Acumatica
  5. Microsoft Dynamics 365
  6. Tally Prime
  7. Odoo
  8. IFS
  9. Deltek Costpoint
  10. SysPro
இவ்வகையான மென்பொருள்களை இயக்குவதற்கு பிரயோக மென்பொருள் (Microsoft Office/Libra Office) தொகுதியில் ஆரம்ப அடிப்படை அறிவும் அனுபவமும் இருப்பின் நிட்சயமாக இவற்றை உங்களால் இயக்கிக் கொள்ள முடியும். குறித்த சில துறைகளில் (Accounting, HR)பணியாற்ற முனைபவர்கள், அத்துறைகளில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருப்பதே சாலச் சிறந்ததுமாகும்.  
***