2013/07/21

கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய

கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. 

ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். 

இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.மென்பொருளை தரவிறக்க :


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.

Text Animation உருவாக்க உதவும் தளம்.

Animation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம்.

அந்தத் தளத்தின் முகவரி http://textanim.com

இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும். Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும்.

நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணினியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.

Team Viewer என்றால் என்ன?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ open செய்யவும்.

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி பார்ப்போம்.
Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும். அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இந்த link-ல் செல்லவும்.  http://download.cnet.com/TeamViewer/3000-7240_4-10398150.html?part=dl-6271747&subj=dl&tag=button இப்போது இதை install செய்து கொள்ளவும். Install செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி window-வில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் மேலும் ஒரு வசதி உள்ளது. File Transfer என்பது. இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும் உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password-ஐ மாற்ற Teamviewer open செய்து Refresh போன்ற button (Password க்கு அடுத்து) click செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே button-ல் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் open செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer-க்கும்.
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது. 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?
முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.

Hardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய...

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த application open செய்து வேண்டிய drive கோலனை தேர்வு செய்து, Read only button அழுத்தி சோதனை செய்து கொண்டு, error செய்தி இருப்பின் Fix button அழுத்தவும். Error செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover button அழுத்தி இந்த error செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 operating systemக்கு  இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். Hardware சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hardwareகளில் பலவிதமான error செய்திகள் காணப்படும். Windows நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற error செய்திகள் அதிகமாக காணப்படும். Hardware மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில Fileகள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும். அந்த Fileகளால் நம்முடைய கணினியில் அடிக்கடி error செய்தி காட்டும். Hardwareல் மென்பொருள்களை நிறுவும் போது sector பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும். இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் Hardwareல் error செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற error செய்திகளை சரி செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை தரவிறக்க http://www.wieldraaijer.nl/