2012/07/29

கணணி என்றால் என்ன...?

தரவுகளை உள்வாங்கி எமது நிபந்தனைக்கேட்ப ஒழுங்கமைத்து தகவல்களை வெளியிடுவதோடு தரவுகளையும்  தகவல்களையும் சேமிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் சாதனம் கணணியாகும்.

அப்பில் அழுகிறது

 
..அப்பில் அழுகிறது...

வாழைப்பழம் : ஏன் அழுற...?
அப்பில் : எல்லாரும் என்ன வெட்டி வெட்டி சாப்புர்றாங்க...
வாழைப்பழம் : செட்.... நீ என்ன விட பரவால்ல...
அப்பில் : ஏன்..?
வாழைப்பழம் : ஒன்ன சரி வெட்டி வெட்டி சாப்புர்றாங்க...
என்ன ரெஸ்ச கலட்டி வீசிட்டு கடிச்சி கடிச்சி
சாப்புர்றாங்க எனக்கு எவ்வளவு வெக்கமா
இருக்கு தெரியுமா...?

உள்ளே செல்ல முன் ...

கவிதையால்
கண்ணுக்கு குளிர்ச்சியளிக்க
கண்ணதாசன் நானல்ல
வைர வரிகள் எழுத
வைரமுத்தும் நானல்ல...!

பார்த்தவுடன் பாடுவதற்கு
பாரதி நானல்ல
பறவைக்கும் பாவிசைக்க
பாரதிதாசன் நானல்ல...!

புதுமைக்கு
புகழ் சேர்க்க வந்த
புதுப் பாவலன் நான்
இதயத்திலுள்ள என் வடுக்களை
இலக்கியத்தில் துவைக்க வந்த
இன்னிசைப் பாடகன் நான்...!

இளங்கவிக்கு இலக்கணமில்லை
இவை இலக்கணமில்லா
புதுக் கவிதைகள்...!

புதுமையுடன் பொறிக்கிறேன்
பொறுமையுடன் படிப்பீர்கள் என்னும்  
பொன் எண்ணத்தில்...!

விலையின்றி சூல் கொண்டு
விளைந்திட்ட கவிகளுக்கு
உங்கள் விமர்சனங்களையும்
சமர்ப்பியுங்கள்...!

 - அன்புடன் -
   எம்.சுபனா

(எம்.சுஐபு ரினாஸ் )