2013/09/23

கணினி விரைவாக செயல்பட 10 கட்டளைகள்

உங்கள் கணினி வேகமான செயல் திறனுடனும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கவேண்டும் என்பது உங்களது விருப்பமாக இருக்கும். புதிதாக வாங்கிய கணினியில் இத்தகைய செயல்திறன் இருக்கும். காரணம், குறைந்த அளவு கோப்புகளும், அதிக அளவு இடமும், வேண்டாத குப்பைகள் மிக மிகக் குறைந்த அளவில் இருப்பதுமே.


அதுவே, ஓர் ஆண்டிற்குப் பிறகு என்றால் டெஸ்க்டாப் நிறைய ஐகான்களும், பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட ரெஜிஸ்ட்ரி, அதிக அளவு கோப்புகள் என்று நிறைந்து வழியும் குப்பைத்தொட்டி போல கணினி மாறியிருக்கும். இதனால் செயல் திறன் குறைந்து, கணினியைத் தொடங்குவதற்குக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

இவ்வாறு மாறிய கணினி விரைவிலேயே செயலிழந்து போகும் வாய்ப்பும் உண்டு. கணினியின் வன்தட்டு (ஹார்ட்டிஸ்க்) செயலிழந்து போகுமானால் நம்முடைய விலை மதிக்க முடியாத கோப்புகளையும் சேர்ந்தே இழக்க நேரிடும். இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க கணினி பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருந்து கணினியைப் பாதுகாப்புடன் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். 
கணினி விரைவான செயல்திறனுடன் இயங்க 10 கட்டளைகளை ஒவ்வொரு கணினிப் பயனரும் கடைப்பிடிக்கவேண்டும்.

1.கணினியின் டெஸ்க்டாப்பில் நாம் அதிகமாக பயன்படுத்தாத மென் பொருள் ஷார்ட்கட் ஐகான்கள் இருந்தால் முதலில் அவற்றை நீக்க வேண்டும். அடுத்ததாக டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்த ஃபைல்கள் மற்றும் பிற ஃபைல்கள், ஃபோல்டர்களைப் போட்டு நிரப்பி வைக்காதீர்கள்.
2.கணினி தொடங்கும்போது தேவையில்லாத புரோக்ராம்கள் பின்புலத்தில் இயங்கலாம். அவற்றை ஸ்டார்ட் அப் (Start up) பகுதியிலிருந்து நீக்கவும் அல்லது அவற்றின் செயல்பாட்டை தடை செய்யவும்.
3.முடிந்தவரை மாதத்திற்கு ஒரு முறையாவது ஹார்ட் டிஸ்க் டிரைவ்களை டிபிராக்மெண்ட் (Defragment) டூலைப் பயன்படுத்தி கோப்புகளை சீராக்கவும்.
4.டெஸ்க்டாப்பை அழகூட்ட அதிக கொள்ளளவு கொண்ட படங்களையோ, மேம்பட்ட கிராபிக் அனிமேஷன் தீம்களையோ அமைக்காதீர்கள். எளிமையான வடிவமைப்பே கணினி வேகமாக இயங்க உதவும்.
5.இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர் என்றால் தற்காலிக இணையக் கோப்புகள் (Temporary Internet Files) மற்றும் குக்கீகளை (Cookies)  தினமும் அழித்துவிடவேண்டும்.
6. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுக்கான மேம்படுத்தல்களை (Updates) நிறுவிக்கொள்ளவும். இது வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்கள் ஆகிய எண்ணற்ற தீங்கிழைக்கும் நிரல்களிடமிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க உதவும்.
7.மென்பொருள் இயக்கத்திற்கு உதவும் வகையில் உருவாகும் தற்காலிக கோப்புகளை (Temp Files) தினந்தோறும் அழித்துவிடவும்.
8.சமீபத்தில் பயன்படுத்திய ஃபைல்களுக்கான ஷார்ட்கட்கள் ரீஸண்ட் டாக்குமெண்ட்ஸ் பகுதியில் பட்டியலிடப்படும். இவற்றையும் நீக்கவும்.
9.புதிய மென்பொருள்கள் நிறுவும்போது ஹார்ட் டிஸ்க் மற்றும் ரிஜிஸ்ட்ரியில் அதற்கென இடம் ஒதுக்கப்படுகிறது. அதிக மென்பொருள்கள் பதியப்படுவதால் ரிஜிஸ்ட்ரி செயல்படும் வேகம் குறையும். எனவே ரிஜிஸ்ட்ரி கிளீனர் மென்பொருளை இரு வாரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி ரெஜிஸ்ட்ரியை சீர் செய்யவும்.
10. இவையல்லாமல் கணினி வேகத்தைக் கூட்ட சிஸ்டம் பிராப்பர்டீஸ் பகுதியில் Advanced சென்று “Adjust for  best performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தக் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தினால், கணினியின் வேகம் அதிகரித்திருப்பதை நீங்கள் உணரலாம். தேவையற்ற கோப்புகளை அழிக்க சி கிளீனர் (C-Cleaner) போன்ற பல இலவச மென்பொருள்கள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றைப் பதிந்து தினமும் பயன்படுத்துவது அவசியமாகும்.

2013/09/18

நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) உடையவரா?

Body mass index
(BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவு மிகவும் முக்கியமாகும். உடலின் (BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவைக் கணிப்பது எவ்வாறென்றால் :-
 வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX)=நிறை (கிலோகிராம்)/(உயரம் x உயரம் (மீட்டரில்))
உதாரணமாக உங்கள் நிறை 70 கிலோகிராமும் உயரம் 1.7 மீட்டரும் எனில்
உங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX)=70/(1.7*1.7)
=24.22 ஆகும்.
சுகதேகியாக உள்ள ஒருவரின் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) 25 ஆகும் (மத்திமம்)
நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு உடையவரா? என்பதை உங்களது வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) மூலம் கீழுள்ள தொகுப்பினால் அறியலாம்
18க்கு குறைவு – இந்நிலைமை உள்ளவர்களுக்கு பொதுவாக எந்த நோயும் ஏற்படலாம்.
18– 25 க்கு இடையில் – மத்திமம் – வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்
26 – 32 க்கு இடையில் – பருமன் உள்ளவர்
32 க்கு மேல் – அதிகமான பருமனும் – கொழுப்பும் உள்ளவர்.

உங்கள் நண்பன் எண்ணிய எண்ணை கூற

பின்வருமாரு கூறவும்
tamil riddles
  1. ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 5238
  2. அவ் வெண்ணுடன் கடைசியாக பூச்சியத்தை சேர்க்கவும்- 52380
  3. பின் முதல் நினைத்த எண்ணைக் கழிக்கவும் – 52380 – 5238 = 47142
  4. அத்துடன் 54 இனை கூட்டவும்- 47142 +54 = 47196
  5. வரும் விடையிலிருந்து பூச்சியத்தை தவிர ஏதாவது ஓர் எண்ணை நீக்கவும்
  6. எஞ்சிய எண்களை கூறச் சொல்லவும் – உ+ம் ஆக 7 ஐ நீக்கியிருப்பின் உங்கள் நண்பன் விடையாக 4,1,9,6, என்பார்
நீக்கிய எண் 7 என்பதை கண்டுபிடிக்க
  1. விடையாக கூறிய எண்களை கூட்டவும்- 4+1+9+6=20
  2. வந்த விடையை விட கூடிய 9 இன் மடங்கை எடுக்கவும்- இவ் உதாரணத்தில் 27
  3. கூடிய ஒன்பதின் மடங்கிலிருந்து கூட்டிய விடையை கழிக்க நீக்கிய எண் வரும்- 27-20=7

புதிய கூட்டல் புதிர்

உங்கள் நன்பரிடம் சவால் விட முன் 1089 எனும் எண்ணை நன்பனுக்கு தெரியாமல்  ஒரு காகிதத்தில் எழுதி மடித்து வைக்கவும்.
பின் நண்பனிடம் கீழ் கண்டவாறு செய்யச் சொல்லவும்
  1. மூன்று இலக்கங்களுடைய ஓர் எண்ணை ஒரு காகிதத்தில் உங்களுக்கு தெரியாமல் எழுத சொல்லவும். அம்மூன்று இலக்கங்களும் வித்தியாசமான எண்களுடனும் முதல் எண் கடைசி எண்ணை விட பெரிதாகவும் இருக்க வேண்டும்.
  2. பின் அவ்வெண்ணை முன்பின்னாக எழுதி முதல் எண்ணிலிருந்து கழிக்கச் சொல்லவும்.
  3. மீண்டும் வந்த விடையை முன்பின்னாக எழுதி முதல் வந்த விடையுடன் கூட்டவும்.
  4. நண்பனின் விடையை முன் கூட்டியே கண்டு பிடித்தாக கூறி மடித்து வைத்த காகிதத்தை திறந்து பார்க்கும்படி கூறவும்.
  5. new sum trick
  6. மேற்கண்ட முறைபடி எந்த எண்ணுக்கு செய்தாலும் விடை 1089 ஆகும்.

ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற

ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37
அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74
வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=***
கடைசி விடையை கூறவும்.
எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின் 5 ஆல் வகுத்தால் கிடைக்கும்,
ஆனால் வகுக்காமல் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற
கடைசி விடையிலிருந்து கடைசி எண்ணை நீக்கவும் : 370->37

இலகுவான எண் புதிர்

A. ஓர் எண்ணை நினைக்கவும் : உ+ம் 157

B. அத்துடன் அடுத்த கூடிய எண்ணைக் கூட்டவும் : 157+158=315 
C. வரும் விடையுடன் 9 ஐ கூட்டவும் : 315+9=324
D. பின் இரண்டால் வகுக்கவும் :324/2=162
E. அத்துடன் எண்ணிய எண்ணைக் கழிக்கவும் : 162-157=?
F. உங்கள் விடை எப்போதுமே 5 ஆகும்.

குட்டீஸ் திறனை வளர்க்க உதவும் இணைய தளங்கள்-

இன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன .   ஆனால் குட்டீஸ்    அடிப்படை திறன் களான  கணித திறன் ,புதிர்கள்  போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .     
   கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு  பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால்  பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு  அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம்  சொல்லி தருவது மிக கடினம் .
                      பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில்  கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள்   அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து  உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை .  இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .
                 எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .
  • எண்கணித புதிர்கள் .
  • அல்ஜீப்ரா
  • ஜாமென்றி
  • லாஜிக் புதிர்கள்
  • கணித விளையாட்டுகள் ,
  • விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
  • சீட்டாட்ட புதிர்கள்
  • ஐன்ஸ்டீன் புதிர்கள்
  • கணித Dictionary
  • மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
  • வயதை கண்டறிதல் , நேரம்  கண்டறியும் புதிர்கள் 
  • எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
              முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள்  , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் .  இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .
 நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக  கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .....
           மேற்கூறிய அடிப்படை திறன்கள்  குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை . 
குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு 
 


 
 

 


 
 
http://www.funbrain.com/brain/MathBrain/MathBrain.html

 

 
http://www.amathsdictionaryforkids.com/
   இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில  கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ..


           உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க  விஷயம்.

அதிசய எண்: 6174

இந்த எண்ணில் என்ன அதிசயம் இருக்கு?. முதலில் ஒரு நான்கு இலக்க எண்ணை தேர்வு செய்யுங்கள். ஒரே ஒரு நிபந்தனை அது (1111,2222,3333…) போன்ற எண்களாக இருக்க கூடாது. இந்த வருடத்தினையே எடுத்துக்கொள்வோமா? 2007

இந்த எண்ணை(2,0,0,7) வைத்துக்கொண்டு அதிகபட்சமாக(இறங்கு நிலை) எந்த எண்ணை எழுத முடியுமோ அதனை எழுதுங்கள் – 7200
அதே போல குறைந்த எண்ணையும் எழுதுங்கள். அதிக எண்ணில் இருந்து குறைந்த(ஏற் நிலை) எண்ணை கழிக்கவும் – 0027

7200 – 0027 = 7173

இதே போல (7,1,7,3) இலக்கங்களுக்கு தொடரவும்

7731 – 1377 = 6354

6543 – 3456 = 3087

8730 – 0378 = 8352

8532 – 2358 = 6174

7641 – 1467 = 6174

அட இதற்கு மேல் 6174 என்று மட்டுமே வருகின்றதே.அது தான் இந்த எண்ணில் சிறப்பு. மொத்தம் உள்ள 8991 (9000-9) எண்களை எவற்றை தேர்தெடுத்தாலும் 7 சுற்றுக்குள் 6174 எண்ணை அடைந்து விடுமாம். முயன்று பாருங்களேன். ஏழு சுற்றுக்கு மேல் நீங்கள் சென்றால் கணக்கு ஒழுங்க போடதெரியலைன்னு அர்த்தமாக்கும்.. மற்றொரு எண்ணிற்கு இதனை போடலாமா?
 நான் பிறந்த ஆண்டு-1985
9851 - 1589 = 8262,
8622 - 2268 = 6354
6543 – 3456 = 3087
8730 – 0378 = 8352
8532 – 2358 = 6174
7641 – 1467 = 6174 வந்துடுச்சா?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!

நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!
செய்ய வேண்டியது:
1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.
2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.
3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.
4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.
என்ன குழம்புகிறதா?
உதாரணமாக 9×4=36 

படத்தில் உள்ளது போல
உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]
3…6..=36 தான் விடை
இன்னொரு கணக்கு 9×7=63 இந்த விடை எப்படி வந்தது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?

அறிவுக்கே அறிவு...

மூன்று பேர் ஒரு ஹோட்டலில் ஒரு ரூம் எடுக்கின்றனர். ஒருவருக்கு வாடகை ரூ.100, மொத்தமாக 300 ரூபாய் தருகின்றனர். சிறிது நேரம் கழித்து கவனித்த மேலாளர் அவர்கள் தங்கி உள்ள அறைக்கு வாடகை ரூ.250 மட்டுமே என்பதை. இப்போது ரூம் பாயை அழைத்து ரூ.50 ஐ திருப்பி கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொல்கிறார். அந்த ரூம் பாய் அதில் ஆளுக்கு 10 ரூபாய் மட்டுமே திருப்பி தருகிறான். மீதி 20 ரூபாயை அவனே வைத்துக் கொள்கிறான்.

இங்கு கேள்வி என்னவெனில். கணக்கு பாருங்கள் ஒருவருக்கு செலவு ரூ.90, மூவருக்கும் சேர்த்து ரூ.270. ரூம்பாய் வைத்து இருப்பது ரூ.20 எனில் ரூ.300 மீதி 10 ரூபாய் எங்கே?
--------------------------------------------------

இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் மீன் பிடிக்க செல்கின்றனர். ஆளுக்கொரு மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் மூன்று மீன்கள் மட்டுமே உள்ளது. அது எப்படி?
--------------------------------------------------

தோகை விரித்து ஆடும் மயில் 4 அடி உயரத்தில் இருந்து முட்டை இடுகிறது. முட்டை உடையுமா? உடையாதா?
---------------------------------------------------






2013/09/17

அறிவுக்கே அறிவு

1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ? ஓரழகனா...
 
ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.  - கண்ணன் தான் மற்றவர்.

2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் ? 
கடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. 
நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே !


3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன ?
 
 (5000 என்றால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடை 4100)

சிக்கல்ஸ்

259 x உங்களோட வயது x 39

பெருக்கிப் பாருங்க . விடையை பார்த்து அசந்து போவிங்க . 3 தடவை ரிபீட் ஆகும் . எதுன்னு கேட்டா ? பெருக்கித் தான் பாருங்களேன்.
-----------------------------------------------------------------------

ஒரே காம்பவுண்டில் உள்ள மூன்று வீட்டிற்கு ஆப்பிள் வியாபாரி, தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதியையும் + அரை ஆப்பிளையும் முதல் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

 
மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.

இப்போது வியாபாரியின் கூடை காலியாகிவிட்டது! அப்படியானால் வியாபாரி கொண்டுவந்த ஆப்பிள்களின் எத்தனை முழு ஆப்பிள்களும், எத்தனை அரை ஆப்பிள்களும் இருந்தன?

விளக்கம்:-


பாதி என்றால்:- பத்தில் பாதி ஐந்து...., நான்கில் பாதி இரண்டு...... என்று பொருள்
அரை என்பது:- ஒரு ஆப்பிளை வேட்டினால் வரும் பாதி துண்டு = அரை!
------------------------------------------

உங்கள் சட்டையை விட உங்கள் பேன்ட்டின் விலை100 ரூபாய் அதிகம், இரண்டும் சேர்த்து 110 ரூபாய் எனில், தனித் தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்க!!
------------------------------------------

தீப்பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உள்ளன. அதை 3 சமமற்ற குவியலாக கொட்டப்பட்டன.
2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.

இப்படி சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களிலும் குச்சிகள் சமமான எண்ணிக்கையை காட்டின.

அப்படியானால் ஆரம்பத்தில் ஒவ்வொரு (சமமற்ற) குவியல்களில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
--------------------------------------------

கீழ்மாடி ஒரு அறையில் 3 சுவிச் உள்ளது. அதில் ஒன்று மேல்மாடிக்குரியது.நீங்கள் சுவிச்சைப் போட்டு ஒரு முறை மட்டும் தான் மேலே போய் பார்த்து வரமுடியும்.அதில் எந்த சுவிச் மேல்மாடிக்குரியது என எப்படி அறிவீர்கள்?
---------------------------------------------

ஒரு குளம் இருக்கு அதுல ஒரு தவளை இருக்கு குளத்திற்கு மொத்தம் 9 படிகள் இருக்கு அந்த படியின் வழியாதான் தவளை வெளியில் வரனும் அதில் ஒரு கண்டிஷன் இருக்கு ஒரு நாளைக்கு 2 படி ஏறினால் ஒரு படி இறங்கி விடவேண்டும். அப்போ எத்தன நாட்கள்ள அது வெளியில் வந்திருக்கும்.

2013/09/16

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

9.CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

10. FDD Error காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட், டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

14. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

16. Non System Disk Error: : பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

17. Missing Operating System: சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.

19. IO Error : சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

20.Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

25. MMX/DLL FILE MISSING : இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். 

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

2013/09/12

சிரிப்புக்கள்...

திரும்ப திரும்ப என் வீட்டுல திருட்டு போகுது சார்
அப்போ திரும்பாதீங்க....

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்

மாப்பிள்ளை நல்ல பசையுள்ள கை
ஏன் என்ன பண்ணுறார்
போஸ்டர் ஒட்டுறார்


என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது.. 75_75.gif நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன். biggrin.gif காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா? rolleyes.gif 
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!! ohmy.gif 


ஒரு நேர்முகத்தேர்வில்:
கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது?
வேலைக்கு வந்த நாதாரி: டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
கே.கே: யோவ்... நிறுத்து..நிறுத்து
நா: டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!


மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

“மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”
“கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா”
“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்”
“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”
“எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”
“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”


சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!? 


வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

2013/09/09

குட்டி ஜோக்ஸ்..

அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்? 
தம்பி: டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.


டீச்சர் -ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க ......
பையன் -போங்க மிஸ்நீங்க பொய் சொல்லரீங்க  எந்த ஊர்லயும் ஒரு வயசுல பாட்டி இருக்கமாட்டாங்க 

சர்தார் ஜீ தன் நண்பருடன் உரையாடினார்
சர்தார் ஜீ : நான் பஞ்சாப்பில் பிறந்தேன்
நண்பர் : அப்படியா? எந்தப் பகுதி?
சர்தார் ஜீ : என் முழுப்பகுதியும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது

என்னதான் பசங்க
150 CC pulsar
160 CC Apache
180 CC Cbz
225 CC karisma பைக் ஐ வாங்கினாலும்
அது 80 CC Scootyக்கு பின்னாடிதான் போகும்



2013/09/07

சிரிப்பூக்கள்....

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம் .
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான் .
நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .
டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா... எந்த அளவுக்கு பாக்குறாங்க ?...” கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!!
வக்கீல் : உனக்கு திருமணமாகிவிட்டதா ?
சர்தார் : ஆகிவிட்டது .
வக்கீல் : யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் ?
சர்தார் : ஒர் பெண்ணை .
வக்கீல் : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள் ?
சர்தார் : ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே !!!..
சார் ,
டீ மாஸ்டர் டீ போடறாரு ,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு ,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு ,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?..
” நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ”
” அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும் ”
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய் .
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் .
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி . வி யில சொன்னாங்க . நீங்க கேட்டீங்களா ?  இல்லை   அவங்கதான் சொல்லியிருக்காங்க... 
ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மாணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வாக சுற்றுகிறது என கேட்டார் அதற்கு அந்த மணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய 
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்

சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்அதுக்கு நான் என்ன செய்யணும் சார்? 
10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: ?!?!?!.

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். 
ஆசிரியர்:தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா..! 

ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு.! 
யானை அடுத்த நாளே செத்துடுச்சு.! 
அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே.?

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்...

ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதனால தான்.!

Skype வீடியோ Call இனை வீடியோவாக Record செய்வது எப்படி?


எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?

கணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?

கணிணி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணிணி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk , சரி Format செய்தவுடன் கணிணி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.

Sound file open செய்வர்கள் சத்தம் வெளியே வராது, இன்டெர் நெட் open பன்னுவார்கள் cannot find page தோன்றும்,Games Open செய்தால் அதுவும் இயங்காது, காரணம் அதற்கான Drivers Install செய்திருக்கமாட்டார்கள். பின்னர் கைவசம் இல்லாத Drivers களை Download செய்ய தனது நேரத்தை செலவழிப்பர்கள்.

இப்படியான பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் Driver Max. இதை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து Drivers backup செய்துகொண்டு Format செய்தவுடன் மீண்டும் நிருவமுடியும்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது என கிழே உள்ள படிமுறையை பாருங்கள். இந்த மென்பொருள் install செய்தவுடன். open செய்யவும்.


பின்னர் உங்கள் கணிணியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis செய்து அதன் பட்டியல் தரும்.


அதில் தேவையான Drivers அல்லது Select All தெரிவு செய்யமுடியும். கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.

click next
பின்னர் கணனியில் நிருவப்பட்டிருக்கும் drivers களை backup செய்ய சிறிது நேரம் எடுக்கும்.


backup எடுத்தவுடன் Save செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும். backup செய்த Driver தொகுப்பை உங்கள் Pen Drive இல் அல்லது DVD இல் எடுத்து கவனமாக வையுங்கள்.தேவைபடும் போது இலகுவாக பயன்படுத்தலாம்.