2013/05/18

நாளைய வரலாறு பேசுமா....?

உடல் உருக்கி
ஒளி  தருது - மெழுகுவர்த்தி

உடல் சிதைத்து
வாசம் தருது - சந்தனம்

அடிவாங்கி
ஒலி  தருது - மத்தளம்

இதையெல்லாம்
இன்றைய வரலாறு பேசுது ...

வெளிநாட்டில்
உணர்வடக்கி  உடல் வெந்து 
உறவுகளுக்காய் உழைத்திடும்
உயிர்களை
நாளைய வரலாறு பேசுமா....?
-2013.05.18-

அலைகள்

கடல்
தன் காதலன் கரைக்கு
கடிதம் அனுப்பிடும் ஊடகம்
அலைகள் ...
***