2012/07/30

வண்டுகளின் வாரிசுகள்

புஸ்பங்களுக்கும் நிம்மதியில்லை
புரிந்துணர்வின்றி கற்பழித்துவிட்டன
தேன் தேடி வந்த வண்டுகள்...

சூலகங்களின் விரிசல்களினால்
காயாகிப் போனதிங்கே
கற்பழிக்கப்பட்ட புஷ்பங்கள்...

யாரறிவார்
வண்டுகளின் வாரிசுகளை 
புஷ்பங்கள் சுமப்பதை...
***
   
கணணி ஒன்றின் பிரதான செயற்பாட்டை வரையறுக்குக ..?
தரவுகளை உள்வாங்கி அதனை ஒழுங்குபடுத்தி
தகவல்களை வெளியிடுதலே கணனியின் பிரதான செயற்பாடாகும்.

தரவு என்றால் என்ன....?
கணனியில் சேமிக்கக் கூடிய அல்லது ஒழுங்கு படுத்தக் கூடிய
நிலையிலுள்ள எழுத்துக்கள், இடம், மக்கள், இலக்கங்கள், உருவங்கள்,
சத்தங்கள், எண்ணக்கருக்கள், பொருள்கள் என்பன தரவாகும்.

தகவல் என்றால் என்ன...?
தரவுகளை நிபந்தனைகளுக்கேட்ப ஒழுங்குபடுத்துவதனால்
கிடைக்கப் பெறுவது தகவலாகும்.
 

சிரிப்பதற்கு

நாட்டாம : என்றா பசுபதி...
பசுபதி : 1,2,3,4,5,6,7,8....
நாட்டாம : என்றா ...
பசுபதி : அதான் என்றோம்ல...
-------------
 
SMS இற்கு அர்த்தம் தெரியுமா...?
S - சிங்கம் அனுப்ப
M - மங்கி படிக்கும்
S - சிமோல் ஸ்டோரி
-------------

கண்ணா ஒன்னு சொல்றன் நல்லா கேட்டுக்க...
உடம்புல சுகரும் மனசுல பிகரும் இருக்கிறவன்
என்னைக்கும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல..
--------------

அமைவிடம்

பொத்துவில் பிரதேசமானது இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். வடக்கில் திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவையும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும் தெற்கு மற்றும் மேற்காக லகுகல பிரதேச செயலகப் பிரிவையும்  எல்லைகளாகக் கொண்டுள்ளது. பொத்துவில் பிரதேசமானது அம்பாறை நகரிலிருந்து 71 கிலோ மீற்றர் தூரத்திலும் கல்முனை நகரிலிருந்து 67 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் நீளம் 21 கிலோ மீற்றர்,  அகலம் 06 -15 கிலோ மீற்றர் வரையாகவும் அமைந்துள்ளதுடன் பரப்பளவு 269 சதுர கிலோ மீற்றர் ஆகவும் உள்ளது.