2013/12/11

நகைச்சுவைகள்

நா‎ன் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"
"உங்க வீடு எ‎ன்ன அவ்வளோ...தூரமா இருக்கு?" 
 *****
என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!""
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"
*****
"இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே வந்து நிக்குதே?"
"அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
*****
டாக்டர் :“ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே…. மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?”
சம்போ : “இல்ல டாக்டர்…. நர்ஸை நினைச்சுகிட்டேன்….!”
*****
அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது
என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
அவர்: இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
*****
திருடன் :(சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..
சிறுவன் : அடகுக் கடையிலே!
*****
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
*****
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
*****
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே
*****
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
*****
பிரசவ ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
கர்ப்பமா போவணும்.

ஜோக்ஸ்

கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
*****
வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..
ரமனன் : ஏன் .. ..
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை.
*****
வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் ..
*****

கணவன் : வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everything)
மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)
கணவன் : தேவைதான்டி எனக்கு !
*****

மனைவி : என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?”
கணவன் : ரெண்டாவது ‘ஷாக்’ எதுக்குன்னு, தான்..!
*****

தரகரே… நீங்க ஒரு பெரிய விஷயத்தை மறைச்சிட்டீங்க.”
“என்ன சொல்றீங்க?”
“பெண் அஞ்சடி உயரம்னு சொன்ன நீங்க, மூணு அடி அகலம் இருப்பாள்னு சொல்லவே இல்லையே…”
*****

“பாடம் எல்லாம் முடிஞ்சி போச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
“சார் உங்க பொண்ணு பேரு என்ன சார்?”
*****

ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல…?”
“சார்… எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு”
*****

ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: ஐ லவ் யூ டூ!
இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: என் கிட்ட காசு இல்லை. ஒழுங்கா கிளம்பு.
*****

எம்.டி.: எதுக்கு அடுத்த வாரம் லீவு வேணும் உனக்கு?
ஊழியர்: எனக்கு கல்யாணம் சார்!
எம்.டி.: உனக்கு எந்த முட்டாப்பய பொண்ணு கொடுக்கறான்
ஊழியர்: என்ன சார் மறந்துட்டீங்களா? உங்கப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்!
*****

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!
அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்!
நீங்க வேற… பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான்.
*****

இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது;
நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
எப்படிச் சொல்ற?
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு,
நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க.
*****

எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?”
“அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!”
*****

டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”
“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
*****
“தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்…”
“அடேங்கப்பா … அப்படி என்ன பேசினாரு?”
“பேசலைய்யா… குறட்டை விட்டாரு!”
*****

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனென்றால் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!
*****

நபர் – 1: இ‌ங்க பா‌த்‌தீ‌ங்களா ஹெல்மெட், லைசன்ஸ், வண்டி
இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் மற‌க்காம எடுத்துட்டு வ‌ந்து‌ட்டே‌ன்
நபர் – 2:அது ச‌ரி ஏ‌ன் நட‌ந்து வ‌ர்‌றீ‌ங்க.
நபர் – 1: ஐய்யைய்யோ….! இன்னிக்கு வண்டிய எடுத்துட்டு வர மறந்துட்டேன் சா‌ர்.
*****

புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே… ஏன்…?” அதுவா…
அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்…”
*****

டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”
நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்”
*****

நீதிபதி : ” அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன் திருடினாய்?”
திருடன்: “என்னோட சாவி எதுவுமே அந்தப் பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை உடைக்க வேண்டியதாப் போச்சிங்க”
*****
“சுவரில் எழுதாதே’ன்னு இருந்தது. நான் போயி…”
“என்ன செய்தே?”
”சரி எழுதலை’ன்னு எழுதிட்டு வந்திட்டேன்”
*****

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?
கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.
*****

எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.
*****
“நான் ஒரு முட்டாள். உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே?” “அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்… அதனால தான் சம்மதிச்சேன்…!”
*****
“வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்”
“நாலு செண்ட் தான்”
“ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே…”
*****
என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”
“எப்படிக் காப்பாத்தினா?”
“ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!”
********