2013/05/26

இணைய வேகத்தை அதிகரிக்க…

எமது இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை.
விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது. இதனை மாற்றுவதன் மூலம் எங்கள்  இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நாம்  பயன்படுத்தமுடியும். 

இதற்கு நாம் செய்யவேண்டியது…

Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள். 

பின்,  Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidth என்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். 

image

அதனைத் தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை தெரிவு செய்வதன் மூலம் நாம்  விரும்பிய பட்டை அகலத்தை(Bandwidth) கொண்டுவரலாம். 

image

மாற்றங்களை செய்த பின் OK பொத்தானை அழுத்தி மாற்றங்களைச் சேமியுங்கள். இனி எமது இணைய பட்டை அகலத்தை 100% முழுமையாக நாம் பயன்படுத்தலாம்.