வீட்டுமனையின் அளவுகள்:
சதுரடி,சென்ட் மற்றும் கிரவுண்ட் (square feet ,cent,ground ) கணக்கிடும் முறை.
மக்கள் தங்கள் பணத்தை பல்வேறு முறைகளில் சேமிக்கின்றனர். தங்கம், பங்குச்சந்தை வைப்புநிதி, காப்பீடு என பட்டியல் நீளும். அந்த வரிசையில் இப்போது அதிகம் பிரபலமாகி வருவது வீட்டுமனை வாங்குவதாகும். எங்கு பார்த்தாலும் திடீர் நகர்கள் உருவாகி இடம் விற்பனைக்கு வருகிறது. அதில் பலர் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனைக்கு வரும் நிலங்களை அளக்க சதுர அடி, சென்ட், கிரவுண்ட் ஆகியவை அளவு முறைகளாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வீட்டு மனைகள் வாங்கும்போது சதுர அடி,சென்ட் மற்றும் கிரவுண்ட் அளவுகளே பயன்படுத்தபடுகிறது. இவைகளில் சதுர அடியிலோ அல்லது சென்ட் அல்லது கிரவுண்ட் போன்ற ஏதேனும் ஒரு முறையில் அளவுகள் கொடுக்கும் போது அதை இன்னொரு அளவாக எப்படி கணக்கிடுவது என்று வெகு சிலரே தெரிந்து வைத்துள்ளனர் உதாரணத்திற்கு வீட்டுமனை அளவை சதுரடியில் அளவுகள் கொடுத்தால் அது சென்ட் அளவில் எவ்வளவு இருக்கும் என கேட்டால் தடுமாற்றம் தான். அவ்வாறு தடுமாறும் ஒரு சிலருக்கான விளக்கமே இந்தப் பதிவு.
பொதுவாக வீட்டுமனையின் நீள அகலங்கள் அடிக் கணக்கில் அளவிடப்படுகிறது. உதாரணத்திற்கு பின்வரும் படத்தினை பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு வீட்டுமனையின் அளவுகள் இருந்தால், கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின்படி அந்த இடம் மொத்தம் எவ்வளவு சதுர அடி உள்ளது என்பதை முதலில் காணக்கிட வேண்டும்.
மொத்த சதுரடி கணக்கிடும் முறை:
நீளமானாலும் சரி அகலமானாலும் சரி அதன் எதிரெதிர் பக்கங்களின் அடி அளவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் நீளத்தை எடுத்துக்கொள்வோம். அந்த இடத்தின் இருபக்கங்களின் நீளங்களை கூட்டி அதை இரண்டால் வகுக்க வேண்டும். அதேபோல் அதன் அகலங்களையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும். அதாவது படத்தில் காட்டியுள்ள அளவுகளின்படி நீளம் 67+63= 130 அதை இரண்டால் வகுக்க வேண்டும். 130÷2= 65பின்பு அதன் அகலங்கள்32+35 =67 அதை இரண்டால் வகுக்கவும் .67÷2= 33.5 இப்போது இதன் இரண்டு விடைகளையும் பெருக்கினால் வருவது அந்த வீட்டுமனையின் மொத்த சதுரடியாகும் அதாவது 65×33.5= 2177.5 ஆக 2177.5சதுர அடி. என்பதே அதன் மொத்த சதுரடி ஆகும்.
மொத்த சென்ட் கணக்கிடும் முறை:
(1 ஏக்கர் = 100 சென்ட் அதாவது 1 ஏக்கர்=43560 சதுரடி) பொதுவாக 1 சென்ட் என்பது 435.6 சதுர அடியாகும். மேலே குறிப்பிட்டவாறு முதலில் மொத்த சதுரடியை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். பின்பு மொத்த சதுரடியை 435.6 சதுரடியால் வகுத்தால் கிடைப்பது அந்த இடத்தின் மொத்த சென்ட் அளவாகும். அதை பின்வருமாறு கணக்கிடலாம். படத்தில் உள்ள அளவின்படி அதன் மொத்த சதுரடி =2177.5 அதை 435.6 ஆல் வகுத்தால் வருவது :4.99 அதாவது அந்த வீட்டுமனையின் அளவு 4.99 சென்ட
மொத்த கிரவுண்ட் கணக்கிடும் முறை:
ஒரு கிரவுண்ட் என்பது 2400 சதுரடி ஆகும் எனவே, மொத்த சதுரடியை 2400 ஆல் வகுத்தால் வருவது கிரவுண்ட் அளவாகும். அதை பின்வருமாறு கணக்கிடலாம். 2177.5÷2400= 0.9072 அதாவது ஒரு கிரவுண்டுக்கும் சிறிது குறைவு.
சரி இந்தப் படத்தில் காட்டியுள்ளபடி அளவுகள் இருந்தால்.... நீங்களே முயற்சி செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக