லேபிள்கள்

கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2014/03/22

இன்றைய எனது ஜனனம்...

கடலலைகள் கரையை
தொடுவதைப் போல்
எம் இனிய நினைவுகள்
என் நெஞ்சை தொடும் வேளை
ஒவ்வொரு நிமிடங்களும்
ஒரு லீப் வருடமாக
என் இதயம் கனக்கிறது...

நாட்கள் பிறக்கும் போது
நான் மரணிப்பதாகவும்
நாட்கள் மறையும் போது
நான் பிறப்பதாகவும்
என்னுள் ஒற்று எண்ணம்...

அந்த எண்ணத்தை வருட
அறிந்து கொண்டேன் - என்
அவளுடன் பேசிடும்
அந்த இனிய மாலைப் பொழுதுகளே
என் பிறப்பின் அர்த்தங்களும்
என் சந்தோசங்களும்...
*****

2013/07/25

யார் சொந்தம்...?



பவனி வரும் காற்றலைகள்
எனக்கு சொந்தமில்லை

அசைந்து வரும் இசையும்
எனக்கு சொந்தமில்லை....

ஓடிவரும் நீரும்
எனக்கு சொந்தமில்லை
பொழிந்துவரும் மழையும்
எனக்கு சொந்தமில்லை...

தேடிப்படித்த கல்வி
எனக்கு சொந்தமில்லை
விருத்தியடைந்த அறிவும்
எனக்கு சொந்தமில்லை....

என் உயிரும்
எனக்கு சொந்தமில்லை
என் உடலும்
எனக்கு சொந்தமில்லை...

ஆனால்
என் கண்ணுக்கு இமை சொந்தம்
என் தலைக்கு முடி சொந்தம்

என் பல்லுக்கு வாய் சொந்தம்
என் மூக்கிற்கு முகம் சொந்தம்

என் உடலுக்கு கை கால் சொந்தம்
என் இதயத்திற்கு யார்தான் சொந்தம்....?
***
2004 

2013/07/24

வழி தருமா என் விதி.....


ஏதோ வேலையென்று
என் துவிச்சக்கரவண்டி - அக்
கல்லூரிப் பாதையில் தவழ - அங்கே
கால்தடக்கி  ஒரு
கல்லூரி மாணவி
நடனமிடுவதைக் கண்டேன்...

கொடி மல்லிகையும் தோற்றிடும்
கொள்ளை அழகுடைய மங்கையவள்
கொவ்வை இதழ் குவித்து - விழுந்த
கொப்பிகளை இதமாக எடுத்திடும்
அழகை  அருகில் கண்டேன்...

அவமானத்தால் அவள்
ஆறேழு எட்டு வைத்து
திரும்பித் திரும்பிப் பார்க்க
தடம்புரண்டது என் மனம்
தாவிக்கொண்டது
இனம் புரியா ஓர்
இதமான ராகம்...

அன்று முதல் அவளது
அனைத்து அசைவுகளையும்
அறிந்து  ஆனந்தப்பட்டேன்...

ஆவணித் திங்கள் ஒன்றில்
அவள் பெயரை அறிந்து
ஆடித்தான் போனேன்...

ரோமியோ - ஜூலியெட்
சாஜஹான் - மும்தாஜ்
லைலா -  மஜ்னு
எல்லா காதலர்களும் வட
எழுத்தால் இணையாதவர்கள்
என் பெயரும் என்னவள் பெயரும் வட
எழுத்தில் இருப்பதை
எண்ணி இடிந்து போனேன்...

சிதறும் சின்னங்கள் வேண்டாம்
சிதறாத நினைவுகளுடன்
சின்னக் குடிசை ஒன்றில் - நாம்
சிறகடிக்க வழி  தருமோ என் விதி.....?
***
2004.

சொந்தங்களைத் தேடி...

உறவு ஒன்றிற்காக  - என்
உயிரையே கொடுத்தேன் - அவளிடம்

வீட்டுக்கு விளக்கேற்றுபவள்
இவள்தான் என்றேன் - என் பெற்றோரிடம்

அவள் நினைவுகள் சுமக்கும்
ஆத்மாவாக - நான் இருக்க

விளக்கேற்றும் அந்த நாளை
வித விதமாக எண்ணி - அவள் இருக்க

அந்த நாளும் வந்தது...

அதிகாலை அன்னை மடியினின்றும்
ஆதவன் விழித்தெழும் வேளை

ஆனந்த மழையில்
அவள் இல்லம் திளைத்திருக்க

எங்கோ எரியப்பட்ட
எரிகணை  ஒன்று
என்னவள் இல்லம் புகுந்திற்று

எரிமலை ஒன்று தீப்பிழம்புடன்
எழுந்தடங்கியதாக அயலவர் புலம்ப
எதையும் அறியாமல்  நான் விலம்ப

கருகிய உடல்களுக்குள் - என்
காரிகையை தேடியபோது
கால் ஒன்றும் கை ஒன்றும்
கிடைத்தது  கண்டு
கனத்துப்போனது  என் இதயம்
வெறுத்துப் போனது இவ்வுலக வாழ்க்கை

மானிடா.... கூறடா....
இலங்கை வானொலி தென்றலில்
சொந்தங்களைத் தேடி
எவ்வாறு நான் விண்ணப்பிப்பதென்று....?
***
2000 ஆம் ஆண்டு தென்றல் பன்பலைவரிசையின் சொந்தங்களைத் தேடி நிகழ்ச்சிக்காக என்னால் எழுதப்பட்டது. 


2013/07/18

எதற்காக....


கட்டுரை  எழுதுகின்றேன்
புகழ் பெறுவதற்காக அல்ல
சமூகத்தை விழிப்படுத்துவதற்காக

புத்தகம் படிக்கிறேன்
வாசகன் ஆவதற்காக அல்ல
உலகை அறிவதற்காக

ஊர் சுற்றுகிறேன்
காதலிப்பதற்காக அல்ல
நிருபராவதற்காக

கடிதம் எழுதுகின்றேன்
நண்பனுக்காக அல்ல
நயவஞ்சகனை அறிவதற்காக

கவிதை எழுதுகின்றேன்
கவிஞன் ஆவதற்காக அல்ல
காதலில் தோற்றதற்காக

பாட்டுப் படிக்கின்றேன்
பாடகனாவதற்காக அல்ல
காதல் துயரத்தை களைவதற்காக

இவை எல்லாம் ஏட்டில் எழுதுகின்றேன்
என்னைத் தெரிவிப்பதற்காக அல்ல
என்னை நான் அறிவதற்காக...
***
2011

சோடிப் பொருத்தம்...


வானவில்லின் வர்ணங் குழைத்து -என்
விதியில் எழுதுகின்றேன் உன்னை

பெண்ணே....
முள்ளில்லா ரோஜா - நீ
முடியில்லா  ராஜா - நான்

வறுமையில் வதங்கியவள்  - நீ
வெறுமையில் வாழ்ந்தவன் - நான்

முத்தாய் சிரிப்பவள் - நீ
சித்தாய் அலைபவன் - நான்

சிந்திக்க வைக்கும் பேதை - நீ
சரித்திரம் படைத்த காளை - நான்

அன்ன நடை கொண்டவள் - நீ
அன்னம்  உனக்கிட அவதரித்தவன் - நான்

இலக்கிய கவிதாயினி - நீ
இலக்கணமற்ற கவித்திடல் - நான்

ஆதலால்
என் விதியில் எழுதினேன் - உன்னை
ஏற்றிடுவாய் உன் வாழ்வில்  நீ - என்னை...

சோடிப் பொருத்தமோ - சூப்பர்
சேர்த்துத்தான்  வைப்பாரோ  உன் - அப்பர்...?
***
2011

2013/07/17

ஏன் நீ என்னை உறங்கவிடுவதில்லை...?

இருபத்தைந்தாண்டுகள்
இவ்வுலகில் பழகிவிட்டோம்

நீ பிரிந்து சென்றபோதுதான்
நான் யாரென்று உணர்ந்தேன்

இனியும் என் காதல்
உனக்குப் புரியப் போவதில்லை
நானும் உன்னை மறப்பதாகவும் இல்லை

ஆனாலும்...

எங்கோ ஒரு மூலையில்
எம் ஊடல்களை  ஞாபகப்படுத்தி
ஏன் நீ என்னை உறங்கவிடுவதில்லை...?
***
2010 

2013/07/13

வட கிழக்கில்...


பிரிந்து  விட்ட  ஆத்மாக்களும்
பிரியாத பல நினைவுகளும்
குண்டுகளின் வடுக்களைப் பார்த்து
கண்ணீ ர்  விடுகின்றன...

இனங்கள் வேறென்றாலும்
இறைவன் ஒன்றுதான்
இது தெரியாத இதயங்களே
இன்று இனவாதம் பேசுகின்றன...

அடர்ந்த காடுகளில்
அவரவர் அணிந்திருந்த
ஆடைகளும்
ஆயுதங்களும்
அலை கடலாய் அணிதிரள
அதிசயம் அங்கே
உயிரற்ற உடல்கள் சிந்தும்
குருதியெல்லாம் சிவப்பே...

செத்த பின்
சோனி என்ன
தமிழன் என்ன
சிங்களவன் என்ன
இழுத்துப் போட்டு மூடினால்
இதயங்களால் ஆயுதங்களை
இழுக்கத்தான் முடியுமா...

மறையளித்த இறைவனைத் துதித்து
மறைய வேண்டிய உயிர்கள்
மறைவிலிருந்து வரும் வெடி வாங்கி
மரணிப்பதுதான் கொடுமை
இதுதான் வடகிழக்கின் வழமை...
***
2001

தரித்திரவாதி...

சத்தியசோதனையும்
சிறிதளவு படித்தேன்
தெ மெயின் கேம்பும்
தெரிந்தளவு படித்தேன் ...

மகா பாரதத்தை என்
மாணவப்பருவத்திலும்
சீறாப்புராணத்தை
சுபஹு வேளையிலும்
படித்த ஒரு சரித்திரவாதி நான்...

ஆனால் இன்று
என் காதலியின் சரித்திரத்தை
எள்ளளவும்  படிக்க முடியாத
தரித்திரவாதி - நான்....
*** 

தங்கப் பெண்...


மஞ்சள் பூசிய பெண்ணவள்
மார்கழி முன் பனியில்
மணல் வார்த்த வீதி வழியே
மனமிட்டு வந்தபோது
மதி மயங்கி - நான்
மட்டுமா மிரண்டேன்
மாடொன்றையும் மிரள வைத்த
தங்கப் பெண்ணல்லவா
அவள்....
***



மறுபிறவி...

வானத்து நிலவாய் நீயும் -அதன்
விண்மீனாய் நானும்
இணைய முடியா
இரு இமயன்களாய்
சுற்றி வந்த நாம்
எடுத்துவிட்ட வரங்களால்
புவி மாந்தர்களுள்
பெண் நீயும்
ஆண் நானுமாய் - மீண்டும்
இணைய முடியாமல்
இவ்வுலகில் வசிப்பதேன்...
***

2013/07/11

கிண்ணஸ் சாதனை...



தன் பிரியமான காதலியை
தேடிச் சென்று
மிதிவெடிக்குப் பலியாகி
காலிழந்து வந்தான்
காதலன்.....

எழுதடா மனிதா கிண்ணஸ்ஸில்
காதலுக்காக காலிழந்தவன்
இவனென்று.....
***

முற்றுப் பெறாத ஓர் ஆத்மா...!


குரு கேட்ட கேள்விகளுக்கு 
என் சிந்தனைக் கோடுகளால் 
பதில் சொன்னேன்.....
காவலன் கேட்ட கேள்விகளுக்கு 
காலத்தில் உருண்டோடி 
கனவுகள் பல கண்டு 
பிணியால் அவதிப்பட்டு 
சொல்ல முடியா ஊமையனாய் 
ஈழத்தில் ஓர்  ஆத்மாவாய் 
தவிக்கின்றேன்.....

அறிவுமிகுந்த கல்லூரி வாழ்க்கை 
அன்புமிகுந்த நட்பு மேடை 
கலைந்து  விடும் மழை மேகங்களாய் 
எனைவிட்டு பிரிய முடியாமல் 
பிரிந்து விட்டன.....

கணிதம் என்ன
விஞ்ஞானம் என்ன 
எவ்வளவோ குறிப்பிற்காய் 
பேனா தூக்கிய என் கரங்கள் - இன்று 
பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டன.....

திசைமாறிய கல்லூரி கட்டிடங்களும் 
திருத்தப்பட்ட பாடப் பரப்புக்களும் 
உன்னால் முடியாது தம்பியென 
உதறிவிட்டன.....

பல ஆயிரம் மாத்திரையிலும் 
பல மில்லி லீற்றர் மருந்திலும் 
பார் போற்று ம் சரித்திரம்
படைத்த என்னுடல் 
ஓர் விடியலுக்காகவும் 
ஓர் புதுயுக வாழ்வுக்காகவும் 
இறைவனைத் தொழுகின்றன.....

ஆனால் 
இறைவன் என் மேற்கொண்ட 
இரதி எவ்வளவென்று 
அறிந்து கொண்டேன்
என் பிணி மூலம்.....
காலம் நிச்சயமாய் 
எனக்கோர் வாழ்வியலை 
எடுத்துரைக்கும் என 
புரிந்து கொண்ட 
புரிந்துணர்வில் அழுத்தமான 
காலத்திற்காய் காத்துநிற்கின்றது 
என் ஆத்மா.....
***

2013/07/06

பாலைவனம்





பாலைவனத்தில்  ஒரு  தனி  மரம் 

அந்த  ஒற்றை  மரத்தின்  வாழ்க்கையே 
இன்று  பாலைவனம்...

வரண்டுவிட்ட  -  என் 
வாழ்க்கையின்   தரித்திரத்தை
வரைந்த  சரித்திரத்தை  எண்ணியபோது 
தங்கைகளின்  சிரிப்பொலிகளும் 
மருமக்கள்களின்  கலகலப்புகளும்  -  என்
சோகங்களை  சமாதானப்படுத்தி 
மேகங்களாய்  கலைந்து  போக 
இந்தப்  பாலைவனமும்  -  ஒரு
சோலைவனமாகிறது.... 
2013-07-04

2013/05/29

குழந்தைகள்


படிக்காத ஆணுக்கும் 
படிக்காத பெண்ணுக்கும் 
தந்தை தாய் என்றும் 
பெற்றோர் என்றும் - இரு 
பட்டங்களை   வழங்கிடும் - ஓர் அபூர்வ 
பல்கலைக் கழகம் - குழந்தைகள்...
2013.08.27

கனவு



விழி மூடி -  நான் 
விருப்பின்றி கண்டிடும் 
செலவின்றிய ஒரு 
சினிமா - இதில் 
சீரும் இல்லை 
சிறப்பும் இல்லை - ஏனெனில் 
கதை 
திரைக்கதை 
வசனம் 
இயக்கம் 
யாவும் 
நான் என்பதால்...
2013.05.29

2013/05/23

தேடல்...

பேக்கப் பண்ண முடியாத
பின்புலம்..


அண்டி வைரசாலும் முடியாத
அன்பின் அரவனைப்புக்கள்...
 

சீ சீ கிளீனர் போட்டும்
சீர்படுத்த முடியாத என் குணம்...
 

பயவோல் அமைத்தும்
பண்படுத்த முடியாத - என் தைரியம்...
 

இவையெல்லாம்
ஸ்பேஸ் பார் மாதிரி
நீண்டு போனபோது;
 

மவுஸ் எடுத்து
மொசில்லா பயபொக்சிலும்  தேடினேன்...


கீ போட்டில் தட்டச்சு செய்து
கூகுள் குரோமிலும் தேடினேன்...
 

என் -தொலைந்து போன வாழ்க்கை
எங்கென்று.....! 

2013.05.23

2013/05/21

தலையெழுத்து...


என் உயிரெழுத்து நீ
உன் மெய்யெழுத்து நான்
நம் இலக்கியத்தில் - உயிர் மெய்
எழுத்துக்கள் தோன்ற
எட்டி உதைத்தது
முதலெழுத்தென்னும் திருமணம்.


2013.05.21

2013/05/20

பேச மறந்தவர்கள் பேசியபோது...

2013.04.30

என் மெகா சீரியல்....


 விதைக்க
விதையின்றிப் போன - என்
வாழ்வின் விடுகதைக்கு
விடை தேடி
வெளிநாடு வந்தேன்...

விடை வரவில்லை - ஆனால்
விதையின்றி விளைச்சல் பெற
வழிகாட்டித் தொடருது
வெளிநாட்டு வாழ்க்கை....


2013.05.09