லேபிள்கள்

பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2016/12/25

வீட்டுமனையின் அளவுகள்: 

சதுரடி,சென்ட் மற்றும் கிரவுண்ட் (square feet ,cent,ground ) கணக்கிடும் முறை.

மக்கள் தங்கள் பணத்தை பல்வேறு முறைகளில்  சேமிக்கின்றனர். தங்கம், பங்குச்சந்தை வைப்புநிதி, காப்பீடு என பட்டியல்  நீளும். அந்த வரிசையில் இப்போது அதிகம் பிரபலமாகி வருவது வீட்டுமனை வாங்குவதாகும். எங்கு பார்த்தாலும் திடீர் நகர்கள் உருவாகி இடம் விற்பனைக்கு வருகிறது. அதில் பலர் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனைக்கு வரும் நிலங்களை அளக்க சதுர அடி, சென்ட், கிரவுண்ட் ஆகியவை அளவு முறைகளாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வீட்டு மனைகள் வாங்கும்போது சதுர அடி,சென்ட் மற்றும் கிரவுண்ட் அளவுகளே  பயன்படுத்தபடுகிறது. இவைகளில் சதுர அடியிலோ அல்லது சென்ட் அல்லது கிரவுண்ட் போன்ற ஏதேனும் ஒரு முறையில் அளவுகள் கொடுக்கும் போது அதை இன்னொரு அளவாக எப்படி கணக்கிடுவது என்று வெகு சிலரே தெரிந்து வைத்துள்ளனர் உதாரணத்திற்கு  வீட்டுமனை அளவை சதுரடியில் அளவுகள் கொடுத்தால் அது சென்ட் அளவில் எவ்வளவு இருக்கும் என கேட்டால் தடுமாற்றம் தான். அவ்வாறு தடுமாறும் ஒரு சிலருக்கான விளக்கமே இந்தப் பதிவு.
பொதுவாக
வீட்டுமனையின்
நீள அகலங்கள்
அடிக் கணக்கில்
அளவிடப்படுகிறது.
உதாரணத்திற்கு
பின்வரும் படத்தினை
பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு வீட்டுமனையின் அளவுகள் இருந்தால், கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின்படி அந்த இடம் மொத்தம் எவ்வளவு சதுர அடி உள்ளது என்பதை முதலில் காணக்கிட வேண்டும்.

மொத்த சதுரடி கணக்கிடும் முறை:

நீளமானாலும் சரி அகலமானாலும் சரி அதன் எதிரெதிர்  பக்கங்களின் அடி அளவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் நீளத்தை
எடுத்துக்கொள்வோம்.

அந்த இடத்தின்
இருபக்கங்களின்
நீளங்களை
கூட்டி அதை இரண்டால்
வகுக்க வேண்டும்.

அதேபோல் அதன்
அகலங்களையும் 
கூட்டி இரண்டால்
வகுக்க வேண்டும்.

அதாவது படத்தில்
காட்டியுள்ள அளவுகளின்படி நீளம்
67+63= 130
அதை இரண்டால்
வகுக்க வேண்டும்.
130÷2= 65
பின்பு அதன்
அகலங்கள் 
32+35 =67 
அதை இரண்டால் 
வகுக்கவும் .
67÷2= 33.5
இப்போது இதன்
இரண்டு விடைகளையும்
பெருக்கினால் வருவது
அந்த வீட்டுமனையின்
மொத்த சதுரடியாகும்
அதாவது
65×33.5= 2177.5  ஆக
2177.5  
  
சதுர அடி.
என்பதே அதன் 
மொத்த 
சதுரடி ஆகும். 

மொத்த சென்ட் கணக்கிடும் முறை:

(1 ஏக்கர் = 100 சென்ட் அதாவது 1 ஏக்கர்=43560 சதுரடி) பொதுவாக 1 சென்ட் என்பது 435.6 சதுர அடியாகும். மேலே குறிப்பிட்டவாறு முதலில் மொத்த சதுரடியை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். பின்பு மொத்த சதுரடியை 435.6 சதுரடியால் வகுத்தால் கிடைப்பது அந்த இடத்தின் மொத்த சென்ட் அளவாகும். அதை பின்வருமாறு கணக்கிடலாம். படத்தில் உள்ள அளவின்படி அதன் மொத்த சதுரடி =2177.5 அதை 435.6 ஆல் வகுத்தால் வருவது :4.99 அதாவது அந்த வீட்டுமனையின் அளவு 4.99  சென்ட
 

மொத்த கிரவுண்ட் கணக்கிடும் முறை:

ஒரு கிரவுண்ட் என்பது 2400 சதுரடி ஆகும் எனவே, மொத்த சதுரடியை 2400 ஆல் வகுத்தால் வருவது கிரவுண்ட் அளவாகும். அதை பின்வருமாறு கணக்கிடலாம். 2177.5÷2400= 0.9072 அதாவது ஒரு கிரவுண்டுக்கும் சிறிது குறைவு.
 சரி இந்தப் படத்தில்
காட்டியுள்ளபடி
அளவுகள் இருந்தால்....
நீங்களே முயற்சி
செய்யுங்கள்.
நீட்டலளவை


•             10 கோண் = 1 நுண்ணணு
•             10 நுண்ணணு = 1 அணு
•             8 அணு = 1 கதிர்த்துகள்
•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு
•             8 துசும்பு = 1 மயிர்நுனி
•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்
•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு
•             8 சிறு கடுகு = 1 எள்
•             8 எள் = 1 நெல்
•             8 நெல் = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம்
•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•             4 காதம் = 1 யோசனை
•             வழியளவை
•             8 தோரை(நெல்) = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
•             2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
•             4 குரோசம் = 1 யோசனை
•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

                16 சாண் = 1 கோல்
                18 கோல் = 1 குழி
                100 குழி = 1 மா
                240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்1

 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
            தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர்                          இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
             நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர்     
             ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
நில அளவை  கணக்கீடுகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

2014/06/26

முதலுதவி முறைகள்-II

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :மயக்கம் வந்தால்  :
வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.


யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்  உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி
மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும். மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.

அந்நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?
குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.
இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.

பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.

தண்ணீரில் முழ்கினால்...
ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும். அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பிபக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும்.  அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

முதலுதவி முறைகள்-I


தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்.

  1. எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
  2. விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
  3. ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
  4. சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
  5. தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
  6. கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
  7. தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
  8. இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
  9. தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
  10. தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.