2013/09/12

சிரிப்புக்கள்...

திரும்ப திரும்ப என் வீட்டுல திருட்டு போகுது சார்
அப்போ திரும்பாதீங்க....

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்

மாப்பிள்ளை நல்ல பசையுள்ள கை
ஏன் என்ன பண்ணுறார்
போஸ்டர் ஒட்டுறார்


என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது.. 75_75.gif நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன். biggrin.gif காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா? rolleyes.gif 
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!! ohmy.gif 


ஒரு நேர்முகத்தேர்வில்:
கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது?
வேலைக்கு வந்த நாதாரி: டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
கே.கே: யோவ்... நிறுத்து..நிறுத்து
நா: டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!


மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

“மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”
“கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா”
“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்”
“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”
“எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”
“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”


சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!? 


வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...