2013/12/12

வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்.

சில வீடியோக்களில் உள்ள ஆடியோ மட்டும் நமக்கு தேவைப்படும். அப்படி பட்ட நேரத்தில் வீடியோ எடிட்டிங் செய்பவர்களிடம் சென்று வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க பணமும் நேரமும் செலவாகும் ஆனால் இனி எளிதாக நம் கணினி மூலமே வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டுமல்ல முக்கியமான பிரேம்-ல் இருக்க்கும் போட்டோவை கூட சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. 

இங்கு கொடுத்திருக்கும் சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
தரவிரக்க முகவரி : http://www.softwareclub.ws/download/scvcs1303.exe

இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும். அடுத்து மென்பொருளை திறந்ததும் வரும்
 (Step 1) Input video file என்பதில் நாம் மாற்ற விரும்பும் வீடியோ கோப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து Play என்ற பொத்தானை அழுத்தி வீடியோவில் உள்ளதில் எதை புகைப்படமாக சேமிக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து கொண்டு (Step2 ) Save Frame என்பதை சொடுக்கவும். 

அடுத்து ( Step 3) -ல் Convert to என்பதில் நாம் மாற்ற வீடியோ கோப்பை வேறு பார்மட்டுக்கு மாற்ற விரும்பினால் அதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து இருக்கும் (step 4) தான் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ கோப்பை எந்த ஆடியோ பார்மட்டுக்கு மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்த்டுத்துக்கொண்டு ( Step 5) Output video file என்பதில் நம் கணினியில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின் ( Step 6 ) split என்ற பொத்தானை அழுத்தவும்.

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க


எவ்வளவு வேகமான இணைய இணைப்பை பெற்றிருந்தாலும்  பலரும் அதன் வேகம் மெதுவாக இருக்கிறது என்ற எண்ணத்திலேயே இருப்போம். உணமையாகவே மெதுவாக உங்கள் இணைய இணைப்பு இருந்தால் பின்வரும் வழியை பின்பற்றி அதனை சிறிது அதிகப்படுத்தலாம்.


1. XP –>கிளிக் programs–> Run
windows 7 க்கு programs—> search box—> Type “Run”

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்
gpedit.msc




3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
  • Computer Configuration
  • Administrative Templates
  • Network
  • QoS Packet Scheduler
  • Limit Reservable Bandwidth
4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.



இப்போது OK or APPLY செய்யவும்.

கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

Error Code, Function Key பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Function key நாம் தெரிந்து கொள்ள வேண்டிய shortcut key ஆகும், அதே போல இணையத்தில் நாம் அடிக்கடி சந்திப்பது Error Codes. இன்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் Function Key பற்றியும், Error Code பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
Error Codes :
400                                                                                                                                      
இது bad Request Error எனப்படும். Server ஆனது தங்களது கோரிக்கையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் டைப் செய்த URL ஆனது தவறானதாக இருக்கலாம்.

401                                                                                                                                   
நீங்கள் Unauthorized பக்கத்தை open செய்ய விரும்புவதாக கம்ப்யூட்டர் நினைத்துக் கொள்ளும். Webpage ஐ ஓபன் செய்ய உங்கள் username மற்றும் Password போன்றவற்றை செக் செய்யவும்.

402                                                                                                                                  
இது payment Required Error எனப்படும்.

403                                                                                                                                     
குறிப்பிட்ட தளம் தங்களை தடை செய்து உள்ளது. அதற்கான Error Code இது.

404                                                                                                                                       
இந்த error தோன்றினால் குறிப்பிட்ட தளத்தின் பெயர், முகவரி மாறி இருப்பதாக பொருள். URL Spelling ஐ செக் செய்யவும்.

408                                                                                                                                      
இது Time Out Error எனப்படும். குறிப்பிடப்பட்ட நேரத்திற்க்கு பின் அந்த முகவரியை தொடர்பு கொண்டால் இது போல வரக்கூடும்.

Function Keys:
F1
  • இது  பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.
  • CMOS Setup இலும் பயன்படுகிறது.
  • Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.
F2
  • இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.
Microsoft Word இல் இதன் பயன்கள்:
  • Alt + Ctrl + F2–>  open a new document in Microsoft Word.
  • Ctrl + F2–> display the print preview window in Microsoft Word.
  • CMOS Setup இலும் பயன்படுகிறது.
F3
  • இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.
  • MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.
  • MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.
F4
  • Find window ஓபன் செய்ய(check in the My Computer )
  • கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
  • Alt+F4 will Close all Programs.
  • Ctrl+ F4 will close current Program.
F5
  • Reload or Refresh
  • Open the find, replace, and go to window in Microsoft Word
  • PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.
F6
  • cursor  ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
  •  Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.
F7
  • MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )
  • Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.
F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்
F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.
F10
  • இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
  • Shift+F10 Right Click ஆக செயல்படும்.
  • Access the hidden recovery partition on HP and Sony computers.
F11
  • இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.
  • Ctrl + F11 as computer is starting to access the hidden recovery partition on many Dell computers,eMachines, Gateway, and Lenovo computers.
F12
  • MS Word இல் save as menu வை  ஓபன் செய்ய பயன்படும்.
  • Shift+F12 will Save MS Word
  • Ctrl+Shift+F12–MS Word  print செய்ய பயன்படும்.

கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig

நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த msconfig உதவுகிறது.



எதற்கு இந்த msconfig?
உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.

இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

இது XP, Vista, Windows 7 வேறு விதமாக உள்ளதால் மூன்றையும் தருகிறேன்.

XP பயனர்களுக்கு

இதில் Run–> msconfig
இப்போது கீழே உள்ள விண்டோ வரும். அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்
இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.

இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.

Vista பயனர்களுக்கு
இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் run இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது start menu வில் search செய்யும் இடத்தில் முழுவதுமாக msconfig என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும். அதற்கு பின் செய்முறையில் Windows 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே comment இல் சொல்லவும்.

Windows 7 பயனர்களுக்கு
இதிலும் Run–> msconfig

இதில் வரும் புதிய விண்டோவில் Start up என்பது கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே XP க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும். பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.

எந்த அளவுக்கு நீங்கள் Uncheck செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் RAM வேகத்தை அதிகமாக்கும். முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள்.

Software இல்லாமல், format செய்யாமல் New partition செய்யலாம்


முதலில் My Computer ஐ right click செய்து Manage என்பதை கிளிக் செய்து ஓபன் செய்யவும்.  இதில் Storage–> Disk Management இதில் உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk இன் Size, Drive எடுத்துக் கொண்டுள்ள Size போன்றவை இருக்கும்.
இப்போது பாருங்கள்.கீழே உள்ளது போல உங்கள் Disk Management பகுதி இருக்கும்.

இதில் கீழே உள்ள இடத்தில் பாருங்கள் Free Space என்று ஒரு பகுதி இருந்தால் அது இன்னும் partition செய்யப் படாமல் இருக்கிறது என்று அர்த்தம்.இங்கு நான் உங்களுக்காக என் ட்ரைவில் Free Space உருவாக்கி உள்ளேன். இப்போது நான் ஒவ்வொன்றாக வரிசையாக சொல்கிறேன்.

1. Free Space partition செய்வது எப்படி ?
இது மிகவும் எளிது மேலே உள்ளது போல Free space என்று காட்டப்படும் இடத்தில் Right Click செய்து New Simple Volume… என்பதை கொடுக்கவும். இப்போது அதிகம் free space இருந்தால், மேலும் புதிய ட்ரைவ்கள் உருவாக்க விரும்பினால் நீங்கள் விரும்பும் அளவு மட்டும் கொடுத்து புதிய ட்ரைவ் உருவாக்கலாம்.
அதாவது 456668 MB Free Space இருந்தால் ஒரு ட்ரைவ் க்கு இவ்வளவு வேண்டாம் என்றால் இதில் பாதி மட்டும் கொடுக்கவும், இப்படி செய்தால் மீதி Free Space ஆகவே இருக்கும் மீண்டும் ஒரு புதிய drive உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
புதிய ட்ரைவை My Computer இல் Format செய்து விட்டு ஓபன் செய்யவும்.

2. அதிகப்படியாக உள்ளதை குறைப்பது எப்படி?
இதுவும் சென்றதை போலவே. இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் C drive க்கு 100 GB கொடுத்து இருந்தால் அது வேஸ்ட் தான். எப்படி குறைப்பது?
இப்போது உங்கள் ட்ரைவில் எது அதிகமாக உள்ளதோ அதை கீழே உள்ள பகுதியிலேயே Right Click செய்து Shrink Volume…. என்பதை கொடுக்கவும்.
இப்போது மேலே உள்ள படம் வந்து கொஞ்ச நேரம் load ஆகும் பின்னர் எவ்வளவு shrink செய்ய முடியும் என்பதை காட்டும். காட்டும் அளவை விட கொஞ்சம் குறைவாக, உங்களுக்கு தேவையான அளவு  shrink செய்யவும். கவனிக்க இங்கு எல்லாம் MB இல் காண்பிக்கும் 1000 MB(or 1024 MB )= 1 GB.  இதன்படி சரியாக GB யில் shrink செய்யவும்.

முக்கியமான விஷயம் ஒரு ட்ரைவ் இல் shrink செய்ததை வைத்து புதிய Drive மட்டுமே உருவாக்க முடியும், அல்லது அதே Drive இல் மீண்டும் Extend செய்யலாம். வேறு ஒரு Existing ட்ரைவ்க்கு பயன்படுத்த முடியாது.

3. Extend செய்வது எப்படி?
இது shrink செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதிகமாக shrink  செய்து விட்டால் இதன் மூலம் மீண்டும் drive சைஸ் தனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி ?


Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடியும்.

  • DVD  ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.
  • இப்போது கீழே உள்ளது போல வரும்.


  • அடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும். இப்போது கீழே உள்ளது போல உங்கள் விண்டோவில் வரும்.

  •  இப்போது Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.

  • இங்கு மேலே உள்ளது போல “taskmgr” என டைப் செய்வதன் மூலம் “task Manager” க்கு வரலாம்.

  • இப்போது ”Install Windows” மீது Right Click செய்து ”Go To Process” கிளிக் செய்யவும். இப்போது ”Set Up” என்பது தெரிவு ஆகி இருக்கும்.
  • இப்போது ”Setup” மீது Right Click செய்து”Set Priority” என்பதில்  ”Real Time” என்பதை தெரிவு செய்யவும்.
  • இப்போது Task Manager And Command Prompt இரண்டையும் close செய்து விடவும்.
அவ்வளவுதான் நண்பர்களே 20 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்து விடும்.
நமது personal Folder களை மறைக்க நாம் ஏதேனும் சாப்ட்வேர் பயன்படுத்துவோம். அந்த சாப்ட்வேர் கிராஷ் ஆகிவிட்டால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் Folder அம்போதான். அப்படி இல்லாமல் எளிதாய் இதை செய்ய ஒரு வழி

முதலில் Start—>Run—>cmd

இப்போது command Prompt ஓபன் ஆகும். இதில் C:\Documents and Settings\content இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )


இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது 


D:/>attrib +h +s Folder Name 

Folder Name–> Your Folder Name. 
இப்போது உங்கள் Folder  மறைந்து இருக்கும். அதை மீண்டும் தெரிய வைக்க 

D:/>attrib -h -s Folder Name 
நீங்கள் Hidden folder கள் இருந்தாலும் யாரும் பார்க்க முடியாது. நீங்கள் மட்டுமே இதை திரும்ப கொண்டுவர முடியும். 
 

Password எதுவும் நினைவில் கொள்ள தேவை இல்லை நீங்கள். attrib ±h, ±s. இதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். 
 
இதில் முக்கியமான விஷயம் C Drive இல் உள்ள folder களை மட்டும் இதில் மறைக்க இயலாது.

Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய

சில நேரங்களில்  ஏதேனும் மென்பொருளை Uninstall செய்யும் போது ஏதேனும் பிரச்சினை வந்து அவை Uninstall ஆகமால் தகராறு செய்யும். அப்படி இடைஞ்சல் கொடுப்பவற்றை சாதாரண முறையில் Uninstall செய்ய இயலாது. எப்படி அவற்றை Uninstall செய்வது என்று பாப்போம். 

முதலில் IObit Uninstaller 2.2 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து  கொள்ளவும். இதனை கிளிக் செய்து RUN கொடுக்கவும், இப்போது இது ஓபன் ஆகும். 
இதில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்கள் இருக்கும். குறிப்பிட்ட மென்பொருளை செலக்ட் செய்து Uninstall/Forced Uninstall என்பதை கிளிக் செய்யவும். இதில் Uninstall சாதரணமாக Uninstall செய்யும், Forced Uninstall குறிப்பிட்ட மென்பொருளின் அனைத்து தகவல்களையும் நீக்கி விடும். எனவே இதையே தெரிவு செய்யவும். 
இதை செய்ய எந்த மென்பொருளை Uninstall செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து Forced Uninstall -ஐ கிளிக் செய்து வரும் புதிய குட்டி விண்டோவில் குறிப்பிட்ட மென்பொருளின் பெயரை கொடுத்து தேட வேண்டும். மென்பொருள் வந்தவுடன், அதை தெரிவு செய்து Next கொடுத்து Uninstall பக்கத்திற்கு வரவும். 
இப்போது Uninstall ஆகி விடும். இதில் உள்ள “Powerful Scan” என்ற வசதி, Uninstall மென்பொருளின் Registry பகுதி தகவல்களை நீக்கி விடும். 
விருப்பம் இருந்தால் அதை செய்து விடுங்கள். அவ்வளவு தான், இனி பிரச்சினை தீர்ந்தது. இந்த மென்பொருள் இன்ஸ்டால் ஆகாத காரணத்தால், இதை Uninstall செய்யவேண்டிய தேவை ஏதும் இல்லை.

MS 2010 – இல் Power Point Presentation – ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி?


MS Power Point மூலம் நாம் பல விதமான வேலைகளை செய்து வருகிறோம். சில சமயம் நாம் உருவாக்கும் Presentation – களை வீடியோ ஆக convert செய்யும் தேவை வரலாம். 


MS Office 2003 மற்றும் 2007 பயன்படுத்துபவர்கள் இதை செய்ய வேறு ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. முக்கியமானவை Wondershare PPT to Video Converter, Xilisoft PPT to Video Converter. 

இதே நீங்கள் MS Office 2010 பயன்படுத்தினால் இதை நேரடியாக செய்யலாம். 

1. உங்கள் Presentation வேலைகளை முடித்த பின்னர் File மீது கிளிக் செய்யுங்கள். 


2. இப்போது Save & Send என்பதில் Create a Video என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. அடுத்து உங்கள் வீடியோ Quality தெரிவு செய்து Save செய்து விடவும். 


4. இப்போது ஒரு Slide எவ்வளவு நேரம் என்று நீங்கள் Set செய்து விட்டு “Create Video” என்பதை கொடுத்தால் போது வீடியோவாக Save ஆகி விடும்.