2013/09/18

நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) உடையவரா?

Body mass index
(BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவு மிகவும் முக்கியமாகும். உடலின் (BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவைக் கணிப்பது எவ்வாறென்றால் :-
 வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX)=நிறை (கிலோகிராம்)/(உயரம் x உயரம் (மீட்டரில்))
உதாரணமாக உங்கள் நிறை 70 கிலோகிராமும் உயரம் 1.7 மீட்டரும் எனில்
உங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX)=70/(1.7*1.7)
=24.22 ஆகும்.
சுகதேகியாக உள்ள ஒருவரின் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) 25 ஆகும் (மத்திமம்)
நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு உடையவரா? என்பதை உங்களது வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) மூலம் கீழுள்ள தொகுப்பினால் அறியலாம்
18க்கு குறைவு – இந்நிலைமை உள்ளவர்களுக்கு பொதுவாக எந்த நோயும் ஏற்படலாம்.
18– 25 க்கு இடையில் – மத்திமம் – வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்
26 – 32 க்கு இடையில் – பருமன் உள்ளவர்
32 க்கு மேல் – அதிகமான பருமனும் – கொழுப்பும் உள்ளவர்.

உங்கள் நண்பன் எண்ணிய எண்ணை கூற

பின்வருமாரு கூறவும்
tamil riddles
  1. ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 5238
  2. அவ் வெண்ணுடன் கடைசியாக பூச்சியத்தை சேர்க்கவும்- 52380
  3. பின் முதல் நினைத்த எண்ணைக் கழிக்கவும் – 52380 – 5238 = 47142
  4. அத்துடன் 54 இனை கூட்டவும்- 47142 +54 = 47196
  5. வரும் விடையிலிருந்து பூச்சியத்தை தவிர ஏதாவது ஓர் எண்ணை நீக்கவும்
  6. எஞ்சிய எண்களை கூறச் சொல்லவும் – உ+ம் ஆக 7 ஐ நீக்கியிருப்பின் உங்கள் நண்பன் விடையாக 4,1,9,6, என்பார்
நீக்கிய எண் 7 என்பதை கண்டுபிடிக்க
  1. விடையாக கூறிய எண்களை கூட்டவும்- 4+1+9+6=20
  2. வந்த விடையை விட கூடிய 9 இன் மடங்கை எடுக்கவும்- இவ் உதாரணத்தில் 27
  3. கூடிய ஒன்பதின் மடங்கிலிருந்து கூட்டிய விடையை கழிக்க நீக்கிய எண் வரும்- 27-20=7

புதிய கூட்டல் புதிர்

உங்கள் நன்பரிடம் சவால் விட முன் 1089 எனும் எண்ணை நன்பனுக்கு தெரியாமல்  ஒரு காகிதத்தில் எழுதி மடித்து வைக்கவும்.
பின் நண்பனிடம் கீழ் கண்டவாறு செய்யச் சொல்லவும்
  1. மூன்று இலக்கங்களுடைய ஓர் எண்ணை ஒரு காகிதத்தில் உங்களுக்கு தெரியாமல் எழுத சொல்லவும். அம்மூன்று இலக்கங்களும் வித்தியாசமான எண்களுடனும் முதல் எண் கடைசி எண்ணை விட பெரிதாகவும் இருக்க வேண்டும்.
  2. பின் அவ்வெண்ணை முன்பின்னாக எழுதி முதல் எண்ணிலிருந்து கழிக்கச் சொல்லவும்.
  3. மீண்டும் வந்த விடையை முன்பின்னாக எழுதி முதல் வந்த விடையுடன் கூட்டவும்.
  4. நண்பனின் விடையை முன் கூட்டியே கண்டு பிடித்தாக கூறி மடித்து வைத்த காகிதத்தை திறந்து பார்க்கும்படி கூறவும்.
  5. new sum trick
  6. மேற்கண்ட முறைபடி எந்த எண்ணுக்கு செய்தாலும் விடை 1089 ஆகும்.

ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற

ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37
அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74
வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=***
கடைசி விடையை கூறவும்.
எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின் 5 ஆல் வகுத்தால் கிடைக்கும்,
ஆனால் வகுக்காமல் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற
கடைசி விடையிலிருந்து கடைசி எண்ணை நீக்கவும் : 370->37

இலகுவான எண் புதிர்

A. ஓர் எண்ணை நினைக்கவும் : உ+ம் 157

B. அத்துடன் அடுத்த கூடிய எண்ணைக் கூட்டவும் : 157+158=315 
C. வரும் விடையுடன் 9 ஐ கூட்டவும் : 315+9=324
D. பின் இரண்டால் வகுக்கவும் :324/2=162
E. அத்துடன் எண்ணிய எண்ணைக் கழிக்கவும் : 162-157=?
F. உங்கள் விடை எப்போதுமே 5 ஆகும்.

குட்டீஸ் திறனை வளர்க்க உதவும் இணைய தளங்கள்-

இன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன .   ஆனால் குட்டீஸ்    அடிப்படை திறன் களான  கணித திறன் ,புதிர்கள்  போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .     
   கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு  பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால்  பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு  அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம்  சொல்லி தருவது மிக கடினம் .
                      பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில்  கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள்   அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து  உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை .  இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .
                 எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .
  • எண்கணித புதிர்கள் .
  • அல்ஜீப்ரா
  • ஜாமென்றி
  • லாஜிக் புதிர்கள்
  • கணித விளையாட்டுகள் ,
  • விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
  • சீட்டாட்ட புதிர்கள்
  • ஐன்ஸ்டீன் புதிர்கள்
  • கணித Dictionary
  • மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
  • வயதை கண்டறிதல் , நேரம்  கண்டறியும் புதிர்கள் 
  • எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
              முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள்  , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் .  இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .
 நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக  கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .....
           மேற்கூறிய அடிப்படை திறன்கள்  குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை . 
குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு 
 


 
 

 


 
 
http://www.funbrain.com/brain/MathBrain/MathBrain.html

 

 
http://www.amathsdictionaryforkids.com/
   இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில  கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ..


           உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க  விஷயம்.

அதிசய எண்: 6174

இந்த எண்ணில் என்ன அதிசயம் இருக்கு?. முதலில் ஒரு நான்கு இலக்க எண்ணை தேர்வு செய்யுங்கள். ஒரே ஒரு நிபந்தனை அது (1111,2222,3333…) போன்ற எண்களாக இருக்க கூடாது. இந்த வருடத்தினையே எடுத்துக்கொள்வோமா? 2007

இந்த எண்ணை(2,0,0,7) வைத்துக்கொண்டு அதிகபட்சமாக(இறங்கு நிலை) எந்த எண்ணை எழுத முடியுமோ அதனை எழுதுங்கள் – 7200
அதே போல குறைந்த எண்ணையும் எழுதுங்கள். அதிக எண்ணில் இருந்து குறைந்த(ஏற் நிலை) எண்ணை கழிக்கவும் – 0027

7200 – 0027 = 7173

இதே போல (7,1,7,3) இலக்கங்களுக்கு தொடரவும்

7731 – 1377 = 6354

6543 – 3456 = 3087

8730 – 0378 = 8352

8532 – 2358 = 6174

7641 – 1467 = 6174

அட இதற்கு மேல் 6174 என்று மட்டுமே வருகின்றதே.அது தான் இந்த எண்ணில் சிறப்பு. மொத்தம் உள்ள 8991 (9000-9) எண்களை எவற்றை தேர்தெடுத்தாலும் 7 சுற்றுக்குள் 6174 எண்ணை அடைந்து விடுமாம். முயன்று பாருங்களேன். ஏழு சுற்றுக்கு மேல் நீங்கள் சென்றால் கணக்கு ஒழுங்க போடதெரியலைன்னு அர்த்தமாக்கும்.. மற்றொரு எண்ணிற்கு இதனை போடலாமா?
 நான் பிறந்த ஆண்டு-1985
9851 - 1589 = 8262,
8622 - 2268 = 6354
6543 – 3456 = 3087
8730 – 0378 = 8352
8532 – 2358 = 6174
7641 – 1467 = 6174 வந்துடுச்சா?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!

நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!
செய்ய வேண்டியது:
1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.
2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.
3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.
4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.
என்ன குழம்புகிறதா?
உதாரணமாக 9×4=36 

படத்தில் உள்ளது போல
உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]
3…6..=36 தான் விடை
இன்னொரு கணக்கு 9×7=63 இந்த விடை எப்படி வந்தது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?

அறிவுக்கே அறிவு...

மூன்று பேர் ஒரு ஹோட்டலில் ஒரு ரூம் எடுக்கின்றனர். ஒருவருக்கு வாடகை ரூ.100, மொத்தமாக 300 ரூபாய் தருகின்றனர். சிறிது நேரம் கழித்து கவனித்த மேலாளர் அவர்கள் தங்கி உள்ள அறைக்கு வாடகை ரூ.250 மட்டுமே என்பதை. இப்போது ரூம் பாயை அழைத்து ரூ.50 ஐ திருப்பி கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொல்கிறார். அந்த ரூம் பாய் அதில் ஆளுக்கு 10 ரூபாய் மட்டுமே திருப்பி தருகிறான். மீதி 20 ரூபாயை அவனே வைத்துக் கொள்கிறான்.

இங்கு கேள்வி என்னவெனில். கணக்கு பாருங்கள் ஒருவருக்கு செலவு ரூ.90, மூவருக்கும் சேர்த்து ரூ.270. ரூம்பாய் வைத்து இருப்பது ரூ.20 எனில் ரூ.300 மீதி 10 ரூபாய் எங்கே?
--------------------------------------------------

இரண்டு அப்பாக்களும், இரண்டு மகன்களும் மீன் பிடிக்க செல்கின்றனர். ஆளுக்கொரு மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் மூன்று மீன்கள் மட்டுமே உள்ளது. அது எப்படி?
--------------------------------------------------

தோகை விரித்து ஆடும் மயில் 4 அடி உயரத்தில் இருந்து முட்டை இடுகிறது. முட்டை உடையுமா? உடையாதா?
---------------------------------------------------