மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் (MS Office) தொகுப்பில் உள்ள பவர் பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம்.
எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள பயன் பாடுகள் ஏராளமானவை.
ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியா ர் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர் பாய்ண் ட்டை அதிகம் பயன்படுத்துகிறார் கள். வகுப்புகளில், கருத்தருங்கு களில் என எல்லாவற் றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட் டேஷனைப் பயன்படுத்திதான் தங்களது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டே ஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.
இந்த இலவச மென்பொருள் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பவர் பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும். உங்கள் பவர்பாய்ன்ட் கோப்புகளை 3PG, 3G2, ASF, WMV, ஆகிய பார்மட்களில் வீடியோ கோப்புகளாக மாற்றிக்கொள்ள லாம்.
இந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:Download Leawo PowerPoint to Video Free.
இந்தமென்பொருளானது பவர்பாய்ண்ட்டின் அனைத்துவித கோப் புகளையும் ஆதரிக்கிறது(Support). PPT, POT, PPTX, PPS போன்ற பவர்பாய்ண்டின் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் இம் மென்பொருள் மூலம் வீடியோவாக மாற்ற முடியும்.
மேலும் பவர்பாய்ண்டில் நாம் உருவாக்கிய அனைத்து அனிமே ஷன்களும், வீடியோவாக மாற்றம் செய்தபிறகு அப்படியே வேலை செய்யும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் சிறப்பு.
என்ன நண்பர்களே… இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற தயாராகி விட்டீ ர்களா?…
உங்கள் பவர்பாய்ண்ட் ஆக்கங்களை இனி உங்கள் வீட்டு டிவி யிலும் போட்டுக் காண்பித்து பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத்தேவையான PowerPoint Presentation நீங்களே உருவாக்கி வீடியோவாக மாற்றி CD பதிவேற்றிக் கொடு ங்கள். அவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.