2013/07/07

கணனி அடிக்கடி Restart அல்லது Stuck ஆனால் என்ன செய்வது?

computer-hardware-maintenance5

கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம்.
4513541006_1a10b18810
1 .)     புதிதாக ஏதேனும் வன்பொருளை உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு இருந்தால் அதன் settings check பண்ணவும்.
DDR2-Ram-DDRII-512MB-1GB-667-PC-5300-
2 .)    ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க pencil eraser  பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும் மதர் போர்டில் இணைக்கும் போது கவனமாக இரண்டு லாக்கும் லாக் ஆகி விட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
400px-AMD_heatsink_and_fan
3 .)        மதர் போர்டில் PROCESSOR HEAT SINK உடன் இணைந்திருக்கும் COOLING FAN இயங்குகிறதா என்று பார்க்கவும். மேலும் அது HEAT SINK  உடன் ஒட்டி இருக்கும் படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.
545646
4 .)           கடைசியாக SMPS (SWITCH MODE POWER SUPPLY) FAN  செயல்படுகிறதா என்று பார்க்கவும்.

மேற்சொன்ன யாவும் சரியாக இருந்தால். OS (OPERATING SYSTEM) மறுபடியும் நிறுவவும்.