2013/07/07

சிரிப்புகள்

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
*****

சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.
( நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)
*****

ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்
"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"
*****

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.
பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.
சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.