மம்மி
U K சென்று வந்த மகன்
ஊட்டி வளர்த்த அன்னையை
உறக்கக் கூவி அழைத்தான்
பதப்படுத்தப்பட்ட பிணமே....
பதப்படுத்தப்பட்ட பிணமே....
என் மகன்
என்னை மம்மி மம்மி
என்று இங்கிலீசிலதான்
கூப்பிடுவான்....
அர்த்தம் புரியாது
அடித்துப் பிடித்து ஓடுகிறது
அம்மா எனும் மரபுக் கவிதை...
---
2013.05.10