2013/07/11

முற்றுப் பெறாத ஓர் ஆத்மா...!


குரு கேட்ட கேள்விகளுக்கு 
என் சிந்தனைக் கோடுகளால் 
பதில் சொன்னேன்.....
காவலன் கேட்ட கேள்விகளுக்கு 
காலத்தில் உருண்டோடி 
கனவுகள் பல கண்டு 
பிணியால் அவதிப்பட்டு 
சொல்ல முடியா ஊமையனாய் 
ஈழத்தில் ஓர்  ஆத்மாவாய் 
தவிக்கின்றேன்.....

அறிவுமிகுந்த கல்லூரி வாழ்க்கை 
அன்புமிகுந்த நட்பு மேடை 
கலைந்து  விடும் மழை மேகங்களாய் 
எனைவிட்டு பிரிய முடியாமல் 
பிரிந்து விட்டன.....

கணிதம் என்ன
விஞ்ஞானம் என்ன 
எவ்வளவோ குறிப்பிற்காய் 
பேனா தூக்கிய என் கரங்கள் - இன்று 
பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டன.....

திசைமாறிய கல்லூரி கட்டிடங்களும் 
திருத்தப்பட்ட பாடப் பரப்புக்களும் 
உன்னால் முடியாது தம்பியென 
உதறிவிட்டன.....

பல ஆயிரம் மாத்திரையிலும் 
பல மில்லி லீற்றர் மருந்திலும் 
பார் போற்று ம் சரித்திரம்
படைத்த என்னுடல் 
ஓர் விடியலுக்காகவும் 
ஓர் புதுயுக வாழ்வுக்காகவும் 
இறைவனைத் தொழுகின்றன.....

ஆனால் 
இறைவன் என் மேற்கொண்ட 
இரதி எவ்வளவென்று 
அறிந்து கொண்டேன்
என் பிணி மூலம்.....
காலம் நிச்சயமாய் 
எனக்கோர் வாழ்வியலை 
எடுத்துரைக்கும் என 
புரிந்து கொண்ட 
புரிந்துணர்வில் அழுத்தமான 
காலத்திற்காய் காத்துநிற்கின்றது 
என் ஆத்மா.....
***