2022/12/12

ERP System என்றால் என்ன..?

Enterprise Resource Planning (நிறுவன வள திட்டமிடல்) என்பது ஒரு வகையான கணினி மென்பொருள் (Computer Software) அமைப்பாகும். ஒரு நிறுவனத்தின் சிறந்த செயல்திறனுக்காக முக்கிய வணிக செயல்முறைகளை தானியங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் இவ்வகையான மென்பொருள்கள் உதவுகின்றன. 


வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கணக்கியல் (Accounting), உற்பத்தி (Manufacturing), இருப்பு (Stock), கொள்வனவு (Purchasing), விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain Management), விற்பனை (Sales), சந்தைப்படுத்தல் (Marketing), மற்றும் மனித வளங்கள் (Human Resources) உள்ளிட்ட துறைகளில் இவ்வகையான ERP மென்பொருள்கள் பிரதானமாக பயன்பாட்டில் உள்ளன.
  
முன்னிலையில் உள்ள  ERP மென்பொருள்கள்:

  1. Oracle Net Suite
  2. Sage Intacct
  3. SAP Business One
  4. Acumatica
  5. Microsoft Dynamics 365
  6. Tally Prime
  7. Odoo
  8. IFS
  9. Deltek Costpoint
  10. SysPro
இவ்வகையான மென்பொருள்களை இயக்குவதற்கு பிரயோக மென்பொருள் (Microsoft Office/Libra Office) தொகுதியில் ஆரம்ப அடிப்படை அறிவும் அனுபவமும் இருப்பின் நிட்சயமாக இவற்றை உங்களால் இயக்கிக் கொள்ள முடியும். குறித்த சில துறைகளில் (Accounting, HR)பணியாற்ற முனைபவர்கள், அத்துறைகளில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருப்பதே சாலச் சிறந்ததுமாகும்.  
***

     

2022/12/10

 OTG என்றால் என்ன..? இதன் பயன்கள் என்ன...?

OTG என்பதன் முழு வடிவம் On The Go என்பதாகும். கணினி இணைப்பைப் பயன்படுத்தாமல் USB சாதனங்களை Smart Phones  அல்லது Tablets உடன் இணைக்க அனுமதிக்கும் ஒரு சாதனமாகும். இது முதன் முதலாக 2001 ம் ஆண்டு பாவனைக்கு வந்ததாகும்.


இதனுடன் பயன்படுத்தப்படவேண்டிய ஒரு USB சாதனத்தை இணைத்துவிட்டு (Plug in) பின்னர் Smart Phones  அல்லது Tablets உடன் இணைத்துப் பயன்படுத்த வேண்டும்.


OTG பயன்கள்:

01. இதில் USB Flash Light ஐப்  பயன்படுத்தி ஒளியைப் பெறலாம்.

02. Joy Stick இனை  இணைத்து Mobile Games விளையாட முடியும்.

03. Mobile இன் Touch இயங்காதிருப்பின் Mouse இணைப் பயன்படுத்தலாம்.  

04. Mobile இன் Touch இல் சில எழுத்துக்கள் இயங்காதிருப்பின் Keyboard இணை  பயன்படுத்தலாம்.

05. Pendrive இணை இணைத்து ஒளி ஒலிப்  பதிவுகளை பார்க்க முடியும்.

06. Card reader உடாக Memory Card இனை  இணைத்து பயன்படுத்தலாம்.

07. Thumb Scanner/Biometric ஸ்கேனர் இணைப் பயன்படுத்த முடியும். 

08. PC Speaker களைப் பயன்படுத்த முடியும்.   

09. Mobile அல்லது Tablet இல் Sim ray இயங்காதிருப்பின் Modem இனைப் பயன்படுத்த முடியும்.

10. ஒரு Mobile இல் இருந்து மற்றொரு Mobile இற்கு charge செய்யமுடியும்.

-----------

S. பரினாஸ்