பின்வருமாரு கூறவும்
- ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 5238
- அவ் வெண்ணுடன் கடைசியாக பூச்சியத்தை சேர்க்கவும்- 52380
- பின் முதல் நினைத்த எண்ணைக் கழிக்கவும் – 52380 – 5238 = 47142
- அத்துடன் 54 இனை கூட்டவும்- 47142 +54 = 47196
- வரும் விடையிலிருந்து பூச்சியத்தை தவிர ஏதாவது ஓர் எண்ணை நீக்கவும்
- எஞ்சிய எண்களை கூறச் சொல்லவும் – உ+ம் ஆக 7 ஐ நீக்கியிருப்பின் உங்கள் நண்பன் விடையாக 4,1,9,6, என்பார்
நீக்கிய எண் 7 என்பதை கண்டுபிடிக்க
- விடையாக கூறிய எண்களை கூட்டவும்- 4+1+9+6=20
- வந்த விடையை விட கூடிய 9 இன் மடங்கை எடுக்கவும்- இவ் உதாரணத்தில் 27
- கூடிய ஒன்பதின் மடங்கிலிருந்து கூட்டிய விடையை கழிக்க நீக்கிய எண் வரும்- 27-20=7