சமூக
வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1
பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய
இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். https://www.facebook.com/hacked அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்). அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும். உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும். அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். |
2013/12/07
உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக