2013/09/07

சிரிப்பூக்கள்....

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம் .
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான் .
நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .
டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா... எந்த அளவுக்கு பாக்குறாங்க ?...” கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!!
வக்கீல் : உனக்கு திருமணமாகிவிட்டதா ?
சர்தார் : ஆகிவிட்டது .
வக்கீல் : யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் ?
சர்தார் : ஒர் பெண்ணை .
வக்கீல் : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள் ?
சர்தார் : ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே !!!..
சார் ,
டீ மாஸ்டர் டீ போடறாரு ,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு ,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு ,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?..
” நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ”
” அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும் ”
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய் .
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் .
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி . வி யில சொன்னாங்க . நீங்க கேட்டீங்களா ?  இல்லை   அவங்கதான் சொல்லியிருக்காங்க... 
ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மாணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வாக சுற்றுகிறது என கேட்டார் அதற்கு அந்த மணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய 
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்

சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்அதுக்கு நான் என்ன செய்யணும் சார்? 
10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: ?!?!?!.

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். 
ஆசிரியர்:தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா..! 

ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு.! 
யானை அடுத்த நாளே செத்துடுச்சு.! 
அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே.?

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்...

ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப “கல்யாணத்தை நிறுத்துங்க”ன்னு ஒரு குரல்.!
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..
அதனால தான்.!