மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
---------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
-----------------------------------------------
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு…
எங்க தலைவரு ‘சிக்கனோட’ பயன்படுத்துவாரு.
------------------------------------------------------------
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா….

உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது ‘ஈஸி’ சேராச்சே!
-------------------------------------------------------------
மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-”உன்னோட இந்த காமெடிதான்”
------------------------------------------------
மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற…
வாஷிங் மெஷின் எங்க?
கீதா:- அது ஆபீஸ் போயி்ருக்குடி

அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா… வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க…

நவீன திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் தகர
சிலேட்டில் எழுதிப் பழகு.
இன்பத்துள் இன்பம் சொறியின்பம் அவ்வின்பம்
சொரிந்தபின் துன்பம் தரும்.
போடுக தண்ணி போடுக போட்டபின்
ஆடுக அதற்கு தக.
--------------------------------------------------------------
புதிய ‘மா’த்திச்சூடி…
அறஞ் செய இரும்பு
ஆறுவது காபி
இயல்வது பெட்டிங்
ஈவது லஞ்சம்
உதவுவது கடத்தல்
ஊதுவது சிகரெட்
எப்படியும் பணம் சேர்
ஏமாற்றிப் பிழை
ஐஸ் வைக்கக் கற்றுக்கொள்
ஒருவனை (ளை) மட்டும் நேசி
ஓசியில் வாழப் படி.
ஒள… (தெரியலீங்க)
-----------------------------------------------------------

ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்.. கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?
கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?
கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!