2013/08/25

கொஞ்சமாவது சிரிங்கப்பா..

பரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.
தேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.

பேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.
“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”
-----------------------------------------------
 பில்கேட்சுக்கு கடிதம் எழுதினார் சர்தார்ஜி
மதிப்பிற்குரிய பில்கேட்ஸ்,
என் வீட்டு உபயோகத்துக்காக ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அதில் சில பிரச்னைகள் இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
1. அதில் ஸ்டார்ட் பட்டன் இருக்கிறது. ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை. சரிபார்க்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரில் ரீசைக்கிள் என இருக்கிறது. என்னிடம் ஏற்கனவே ஒரு சைக்கிள் இருப்பதால் ரீஸ்கூட்டர் கிடைக்குமா?
3. எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குப் பதிலாக, மைக்ரோசாஃப்ட் சென்டென்ஸ் படிக்க வழி உண்டா?
4. கம்ப்யூட்டரில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் இருக்கிறது. நான் வீட்டில் உபயோகிப்பதால், மைக்ரோசாஃப்ட் ஹோம் கிடைக்குமா?
கடைசியாக ஒரு சொந்தக் கேள்வி
உங்கள் பெயரில் “கேட்ஸ்” இருக்கிறது. ஆனால் நீங்களோ “வின்டோஸ்” விற்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
---------------------------------------------
கிரிக்கெட் மேட்ச் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னாராம் டீச்சர்.
எல்லா மாணவர்களும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்க, சர்தார்ஜி மாணவன் இப்படி எழுதிக் கொடுத்தானாம்…
“மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கன்சல் செய்யப்பட்டது…”
----------------------------------------------
ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?
சர்தார்ஜி: டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
---------------------------------------------
செல்போன் டவர்களையும், அதில் ஒளிரும் சிகப்பு விளக்குகளையும் பார்த்த சர்தார்ஜிக்கு ஒரே பூரிப்பு. சந்தோஷத்தில் இப்படிக் கத்தினாராம் அவர்.
“இந்தியா எவ்ளோ வேகமா முன்னேறிட்டு வருது… ஏரோபிளேன் போகறதுக்குக் கூட, உயரத்துல எப்படி டிராஃபிக் சிக்னல் வச்சிருக்காங்கப்பா!”
---------------------------------------------
டாக்டர்: நீங்க இவரை 1 மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்…
நோயாளியின் உறவினர்: அதுக்கென்ன செய்ய? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரந்தானே ஆச்சு?
---------------------------------------------
கடவுளுக்கு ஒருநாள் திடீர் ஆசை. மது அருந்த விரும்பி, பாருக்குப் போகிறார். முதலில் 5 பாட்டில் விஸ்கி, அடுத்து 5 பாட்டில் ரம், பிறகு 5 பாட்டில் ஒயின் என வரிசையாகக் குடிக்கிறார். அவரைப் பார்த்த பார் கடைக்காரருக்கோ ஆச்சரியம்.
கடைக்காரர்: “பொதுவா ரெண்டு ஃபுல் அடிச்சாலே, எல்லாரும் ஃபிளாட் ஆயிடுவாங்க. உனக்கு மட்டும் எப்படி இன்னும் போதையே ஏறலை? யார் நீ?” எனக் கேட்கிறார் கடவுளிடம்.
கடவுள்: “நான்தான் கடவுள்” என்கிறார் அவர்.
கடைக்காரர்: “தோடா… இப்பதான் மப்பு ஏற ஆரம்பிச்சிருக்கு” என்று சிரித்தார் கடைக்காரர்.
--------------------------------------------