கவிதையால்
கண்ணுக்கு குளிர்ச்சியளிக்க
கண்ணதாசன் நானல்ல
வைர வரிகள் எழுத
வைரமுத்தும் நானல்ல...!
பார்த்தவுடன் பாடுவதற்கு
பாரதி நானல்ல
பறவைக்கும் பாவிசைக்க
பாரதிதாசன் நானல்ல...!
புதுமைக்கு
புகழ் சேர்க்க வந்த
புதுப் பாவலன் நான்
இதயத்திலுள்ள என் வடுக்களை
இலக்கியத்தில் துவைக்க வந்த
இன்னிசைப் பாடகன் நான்...!
இளங்கவிக்கு இலக்கணமில்லை
இவை இலக்கணமில்லா
புதுக் கவிதைகள்...!
புதுமையுடன் பொறிக்கிறேன்
பொறுமையுடன் படிப்பீர்கள் என்னும்
பொன் எண்ணத்தில்...!
விலையின்றி சூல் கொண்டு
விளைந்திட்ட கவிகளுக்கு
உங்கள் விமர்சனங்களையும்
சமர்ப்பியுங்கள்...!

- அன்புடன் -
எம்.சுபனா
கண்ணுக்கு குளிர்ச்சியளிக்க
கண்ணதாசன் நானல்ல
வைர வரிகள் எழுத
வைரமுத்தும் நானல்ல...!
பார்த்தவுடன் பாடுவதற்கு
பாரதி நானல்ல
பறவைக்கும் பாவிசைக்க
பாரதிதாசன் நானல்ல...!
புதுமைக்கு
புகழ் சேர்க்க வந்த
புதுப் பாவலன் நான்
இதயத்திலுள்ள என் வடுக்களை
இலக்கியத்தில் துவைக்க வந்த
இன்னிசைப் பாடகன் நான்...!
இளங்கவிக்கு இலக்கணமில்லை
இவை இலக்கணமில்லா
புதுக் கவிதைகள்...!
புதுமையுடன் பொறிக்கிறேன்
பொறுமையுடன் படிப்பீர்கள் என்னும்
பொன் எண்ணத்தில்...!
விலையின்றி சூல் கொண்டு
விளைந்திட்ட கவிகளுக்கு
உங்கள் விமர்சனங்களையும்
சமர்ப்பியுங்கள்...!

- அன்புடன் -
எம்.சுபனா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக